கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

கடையநல்லூர் அரசு பள்ளியில் கல்வி உதவித் தொகை வழங்கல்


கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை யூனியன் சேர்மன் பானுமதி வழங்கினார்.

கடையநல்லூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கிட்டுராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெரியசாமி, பள்ளி தலைமையாசிரியை ஆயிஷாள் முன்னிலை வகித்தனர்.

தமிழாசிரியர் சண்முகசுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு படிக்கும் 78 மாணவர்கள், 11ம் வகுப்பில் 147, 12ம் வகுப்பில் 125 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை யூனியன் சேர்மன் பானுமதி, துணைத் தலைவர் கம்பனேரி பெரியதுரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாணவரணி வக்கீல் அருள்ராஜ், சொக்கம்பட்டி பெருமையாபாண்டியன், நகர அவைத்தலைவர் கருப்பையா, பொருளாளர் மாரியப்பன், காஜாமைதீன் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக