கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 31 ஜனவரி, 2012

கடையநல்லூர் அருகே வெடி பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது


கடையநல்லூர் அருகே 25 கிலோ எடை கொண்ட ஜெலட்டின் குச்சிகளும், 200 டெட்டனேட்டர்களும் நேற்று போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், துரைப்பாண்டி, செந்தில்வேலன், சம்சுதீன் மற்றும் போலீசார் சொக்கம்பட்டி போலீஸ் ஸ்டேனுஷக்குட்பட்ட புன்னைவனம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரிடம் வாகன சோதனை நடத்தியபோது உரிமம் இல்லாமல் வாகனத்தில் வைத்திருந்த 25 கிலோ எடை கொண்ட ஜெலட்டின் குச்சிகளும், 200 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த கே.எம்.மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முப்புடாதி (எ) விஜி (29), நன்னகரம் இந்திராநகரை சேர்ந்த ஈஸ்வரசங்கரசாம்ராஜ் (45) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தில் உரிமம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக கல்குவாரி நடத்தி வருவதாக கூறப்படும் குருக்கள்பட்டி கீழத்தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் பாலசுப்பிரமணியன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகரின் பினாமி தான் பாலசுப்பிரமணியன் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுலைமான் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கடையநல்லூர் நகராட்சி கூட்டம் அதிமுக.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு


முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்கிற்கு சிலை வைக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அஜண்டாவில் இடம்பெறாததால் அதிமுக கவுன்சிலர்கள் நேற்று கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கடையநல்லூர் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று தலைவர் சைபுன்னிசா தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, துணைத் தலைவர் ராசையா மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியவுடன் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சீவலங்கால், சாலாப்பேரி ஆகிய ஓடைகள் தூர் செய்யப்பட்டதற்கான செலவினம் குறித்த பொருள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அப்துல் லத்தீப் : போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்ட பணிகள் என்றாலும் நடந்து முடிந்த பிறகு இதற்கான செலவு ஒப்புகை சீட்டு ஏன் வைக்கப்படவில்லை.

கணபதி : சீவலங்கால் ஓடையில் ஒரு பிட் கூட மண் அள்ளிப்போடவில்லை. பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் அந்த பகுதியில் காணப்படாத நிலையில் இந்த செலவினத்தை எப்படி அனுமதிக்க முடியும்.

திங்கள், 30 ஜனவரி, 2012

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2012-ம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருது

2012-ம் ஆண்டுக்கான ஃபிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை வித்யா பாலன் வென்றார். 


இம்தியாஸ் அலியின் ராக்ஸ்டார் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை ரன்வீர் கபூர் வென்றார்.


இந்த படத்தின் இசையமைப்புக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார்.


சிறந்த திரைப்படத்துக்கான விருது ஜோயா அக்தரின் ஜிந்தகி நா மிலெகி டோபரா படத்துக்கு வழங்கப்பட்டது.

கூடங்குளத்தில் இன்று அணுஉலை மாதிரியை எரித்து ஒப்பாரி போராட்டம்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவலியுறுத்தி பொதுமக்களும், அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களும் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதுவும் நடக்கவில்லை.


ஆகையால் அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்தியஅரசு நிபுணர்குழுவை அமைத்தது. அந்த குழு போராட்டக் குழுவினரிடம் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவற்றில் உடன்பாடு ஏற்படாததால் அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. தொடர் உண்ணாவிரதம் நீடித்தது.
இடிந்தகரை கிராமத்தில் நடந்துவரும் அவர்களது 3-ம் கட்ட தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 105-வது தினத்தை எட்டியுள்ளது. மேலும், இன்று காந்தி நினைவு தினம் என்பதால் அணுஉலை மாதிரியை எரித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அணுஉலை எதிர்ப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி, அணுஉலை மாதிரியை தீவைத்து எரித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் கூடங்குளத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து, மாலையில் போராட்டக் குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், மத்திய நிபுணர் குழுவினர் நாளை நடத்த இருக்கும் 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதா? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அமல்

தமிழகம் முழுவதும் இணைய தளம் மூலம் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள், மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் வாரிய அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள்(எல்டி.,நுகர்வோர்) மின் கட்டணங்களை இணைய தளம் மூலம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் www.tnebnet.org என்ற இணைய தள முகவரியில் மின் கட்டணங்களை செலுத்தி பயன் பெறலாம்.இவ்வாறு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடையநல்லூர் தொகுதிக்கு கூடுதலாக 100 தொகுப்பு வீடுகள் வழங்க வலியுறுத்தல்


கடையநல்லூர் தொகுதியில் பயனாளிகளுக்கு 100 தொகுப்பு வீடுகள் கூடுதலாக வழங்கிட மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

கடையநல்லூர் தொகுதியில் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய மூன்று யூனியனுக்குட்பட்ட கிராமங்கள் இடம் பெற்றுள்ளன. தென்காசி யூனியனை பொறுத்தவரை சுமார் 5 பஞ்.,கள் இடம் பெற்றுள்ள நிலையில் இத்தொகுதியில் தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளின் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த தொகுதியை பொறுத்தவரை வறுமைக்கோட்டிற்குட்பட்ட பயனாளிகள் பட்டியலில் அதிகமானோர் இடம் பெற்றுள்ள நிலையில் கூடுதலான அளவில் தொகுப்பு வீடுகள் வழங்கிட வேண்டுமென உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனிடையில் கடையநல்லூர் தொகுதியில் கூடுதலாக தொகுப்பு வீடுகள் வழங்கிட மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ""கடையநல்லூர் தொகுதியில் முதல்வரின் திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி இத்தொகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு தொகுப்பு வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலான வகையில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மக்கள் பிரதிநிதிகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன்படி இத்தொகுதியில் கூடுதலாக 100 தொகுப்பு வீடுகள் வழங்கிட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் நிலையில் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட தென்காசி யூனியனில் அமைந்துள்ள பஞ்.,களுக்கும், கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை யூனியினில் உள்ள பயனாளிகளுக்கும் முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

சுழற்கழகம் சார்பில் 1,11,111 மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு


சுழற்கழக பசுமைப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1,11,111 மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு பெற்று விட்டதாக சுழற்கழக பசுமைப் பாதுகாப்பு திட்டத்தின் தலைவரும், சுழற்கழகத் துணை ஆளுநருமான புளியங்குடி பி.எஸ்.சங்கரநாராயணன் தெரிவித்தார்.

 சுழற்கழக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை புதன்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. சுழற்கழகம் சார்பிலும் இதற்கென ஒரு திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


 இதன்படி,சுழற்கழக மாவட்டத்தைப் பசுமையான மாவட்டமாக உருவாக்கும் முயற்சியாக கடந்த முறை பசுமைப் பாதுகாப்பு திட்டம் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் 1,11,111 மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் 11-11-2011 அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் கல்வி நிறுவனங்கள்,மருத்துவமனைகள்,நீதிமன்ற வளாகங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன என்றார் சங்கரநாராயணன்.

புளியங்குடி அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது


புளியங்குடி அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புளியங்குடி அருகேயுள்ள அய்யாபுரம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட கள்ளசாராயத்தை காய்ச்சி வைத்திருப்பதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அய்யாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இப்பகுதியை சேர்ந்த சந்திரன் (48), ஆனந்தராஜ் (19), கணேசன் (26) ஆகியோர் தடை செய்யப்பட்ட கள்ளசாராயம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்து சாராயம் காய்ச்சிட பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

சனி, 28 ஜனவரி, 2012

கடையநல்லூரில் அ.தி.மு.க.,வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் கடையநல்லூரில் நடந்தது.கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, செல்லப்பன், சங்கரபாண்டியன், செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேலு, மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் யாத்ரா பழனி, சசிகுமார், செங்கோட்டை ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகேசன், திருப்பதி, முத்துராமன், அய்யாசாமி, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். 


கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராஜா வரவேற்றார். மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ் தொகுப்புரையாற்றினார்.கூட்டத்தில் அதிமுக தலைமை பேச்சாளர்கள் கோவை புரட்சிதம்பி, நயினாமுகம்மது, முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., நயினாமுகம்மது, மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், கடையநல்லூர் தொகுதி இணை செயலாளர்கள் பி.வி.நடராஜன், எல்ஐசி முருகையா, செங்கோட்டை நகராட்சி தலைவர் மோகனகிருஷ்ணன், கடையநல்லூர் யூனியன் தலைவி பானுமதி, துணைத் தலைவர் கம்பனேரி பெரியதுரை. செங்கோட்டை யூனியன் துணை தலைவர் வக்கீல் ஆதிபாலசுப்பிரமணியன், டவுன் பஞ்.,தலைவர்கள் அச்சன்புதூர் டாக்டர் சுசீகரன், சாம்பவர்வடகரை செல்வி, இலஞ்சி காத்தவராயன், ஆய்க்குடி குட்டியம்மாள், பேரூர் செயலாளர்கள் காந்திபாண்டியன், பரமசிவன், முத்துக்குட்டி, அலியார், கடையநல்லூர் நகர அவைத்தலைவர் கருப்பையா, நகர பொருளாளர் மாரியப்பன், கவுன்சிலர்கள் முத்தையாபாண்டி, மாரிமுத்து, கணபதிதேவர், முத்துப்பாண்டி, முத்துகிருஷ்ணன், ஆறுமுகம், மாவட்ட பேரவை இணை செயலாளர் வடகரை ரஜப் முகம்மது, பஞ்.,தலைவர்கள் செல்லப்பா, டெய்சிராணி, மூக்கையா, மாவட்ட பிரதிநிதி சொக்கம்பட்டி பெருமையாபாண்டியன் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

சுரண்டை அருகே பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது


நெல்லை மாவட்டம் சுரண்டையில் இருந்து புளியங்குடிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. புன்னைவனம் அருகே சென்ற போது திடீரென்று ஒரு மர்ம கும்பல் பஸ்சை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியது. 



பெட்ரோல் குண்டு பஸ்சுக்குள் விழுந்து டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பஸ்சின் சீட்டு தீயில் கருகியது. பஸ் கண்ணாடியும் உடைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் அந்த மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. 

சீட்டில் பிடித்த தீயை டிரைவர் அணைத்தார். அந்த பஸ்சில் அங்கு ஒன்றும், இங்கொன்றுமாக குறைவான பயணிகளே இருந்தனர். இதனால் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 

அதைத் தொடர்ந்து பஸ்சை புளியங்குடி பணிமனைக்கு டிரைவர் ஓட்டிச் சென்றார். தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜமீம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 

இந்த சம்பவம் குறித்து புளியங்குடியை சேர்ந்த பஸ் கண்டக்டர் சரவணன் சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் ஜெயராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேற்று காலை சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது. 

அப்போது புன்னைவனம் குளக்கரையில் காலி மதுபாட்டில்களும், சிகரெட் துண்டுகளும் கிடந்தன. அதில் பதிந்து இருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். பின்னர் பாம்புக்கோவில் வழியாக வந்தனர். அப்போது பாம்புகோவில் ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். 

இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அய்யாபுரத்தை சேர்ந்த பாலையா மகன் பிரபாகரன் (வயது 28), ராஜாமணி மகன் ராபர்ட் (21), பாண்டி மகன் செல்லத்துரை என்ற சேவியர் (34), செல்லப்பா மகன் சண்முகராஜ் (26) ஆகியோர் என்பதும், பஸ் மீது பெட்ரோல் குண்டை வீசியதும் தெரியவந்தது. 

இதுதொடர்பாக சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

கடையநல்லூர் குடியரசு தின விழா கொண்டாட்டம்

கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகர்மன்றத் தலைவி சைபுன்னிஷா தேசியக் கொடியேற்றினார். இதில் துணைத் தலைவர் ராசையா, ஆணையர் அப்துல் லத்தீப்,பொறியாளர் ராமலிங்கம், துப்புரவு அலுவலர் கணேசமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம்,பிச்சையாபாஸ்கர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கிருஷ்ணாபுரம் ஹரிணி வித்யாலயா ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினார். இதில் தாளாளர் இசக்கிலால்சிங்,செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


வியாழன், 26 ஜனவரி, 2012

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ-125 குடும்பங்கள் தப்பின-ஆனால் உடமைகள் நாசம்!

ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இதனால் அங்கு தங்கியிருந்த 125 குடும்பங்கள் வீடுகள், சொத்துக்களை இழந்து தவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அந்த குடும்பங்கள் உயிர் தப்பியுள்ளன.

ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக காலை 9.15 மணி அளவில் தான் தீயை அணைக்க முடிந்தது.

அதிகாலை 2.15 மணிக்கு ஏற்பட்ட தீ சீதோஷ்ன நிலை காரணமாகவும், காற்று காரணமாகவும் மளமளவென 25 மாடிகளிலும் பரவியது என்று ஷார்ஜா தீயணைப்பு துறை டைரக்டர் ஜெனெரல் பிரிகேடியர் அப்துல்லாஹ் சயீத் அல் சுவைதி தெரிவித்தார். இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருந்த 125 குடும்பங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின. ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவிக்கின்றனர்.

37 வயதாகும் அஹம்து யாகூப் என்பவர் தன்னுடைய வீட்டில் 60,000 திர்ஹம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகவும், எலலாவற்றையும் புதிதாக வாங்க வேண்டும் என்றும், அதற்காக புகார் செய்யப் போவதாகவும் கூறினார்.

அறை எண் 805ல் இருந்த இஃபியானி டவ் என்பவர் தன்னுடைய குழந்தையை கையில் வைத்திருந்த சமயத்தில் தீ பிடித்த செய்தி பற்றி தெரிந்ததாகவும், அதனால் எல்லாவற்றையும் விட்டு விட்டு வீட்டை வெளியேறியதாகவும், தற்போது தன்னிடத்தில் உடுத்திய உடை மட்டும் தான் மிஞ்சியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தீயினால் பாதிக்கப்பட்டு விடுகளை இழந்த குடும்பங்கள் பல இடங்களில் பாதுக்காப்பாக தங்க வைக்கப்ப்ட்டுள்ளனர். ஷார்ஜா சாரிட்டியின் மேலாளர் சாலேஹ் அல் ஷுவைஹி அவர்கள் தங்களின் 24 தன்னார்வத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகவும், 1000 திர்ஹம் முதல் 2000 திர்ஹம் வரை குடும்பத்தின் அளவை பொறுத்து நிதியுதவி செய்வதாகவும், அவர்களுக்காக வீடுகள் பார்க்கப்படுவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அவர்களை வேறு வீடுகளில் குடியமர்த்த போவதாகவும் தெரிவித்தார்.

குற்றாலத்தில் இன்று மரத்தில் கார் மோதி விபத்து: 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் சாவு


குற்றாலத்தில் இன்று அதிகாலை கார் மரத்தில் மோதி திருமண விழாவுக்கு வந்த 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 டாக்டர்கள் உள்பட 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரிதாப சம்பவம் பற்றி விபரம் வருமாறு:-


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி, இவர் ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இவரது மகன் ரவிகுமரன் (வயது 29). இவர் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் முடித்து டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும் புளியங்குடி நகராட்சி துணை தலைவராகவும் இருந்தார். இவருடன் தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த டாக்டர் அன்பரசன் என்பவரும் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார்.
அன்பரசனுக்கு இன்று தென்காசியில் திருமணம். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்களது நண்பர்கள் மதுரை எழில்நகரை சேர்ந்த டாக்டர் கார்த்திக் (25), போடி ஜீவா நகரை சேர்ந்த டாக்டர் தினேஷ் (27), ராஜபாளையம் பச்சை மடத்தை சேர்ந்த டாக்டர் ரகு (28) ஆகியோர் நேற்று இரவே குற்றாலம் வந்தனர்.
குற்றாலம் அருகே உள்ள நன்னகரத்தில் டாக்டர் ரவிக்குமாருக்கு சொந்தமாக ஒரு கியாஸ் ஏஜென்சி உள்ளது. இந்த கியாஸ் ஏஜென்சி குடோனில் டாக்டர்கள் 4 பேரும் ஓய்வெடுத்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இவர்கள் அனைவரும் ஒரு காரில் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்காக சென்றனர்.
காரை குற்றாலம் நன்னகரத்தை சேர்ந்த டிரைவர் இசக்கிமுத்து (29) என்பவர் ஓட்டினார். அவர்களுடன் பாதுகாப்பாக வாசுதேவநல்லூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கியாஸ் கம்பெனி மேலாளர் சின்னசாமி (40) என்பவரும் காரில் சென்றார். கார் பழைய குற்றாலம், செண்பகாகுளம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக ரோட்டோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் ஒரு பகுதி நொறுங்கியது. காரில் இருந்த டாக்டர் ரவிகுமரன், டாக்டர் கார்த்திக், கியாஸ் கம்பெனி மேலாளர் சின்னசாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். டிரைவர் இசக்கி முத்து, டாக்டர்கள் தினேஷ், ரகு ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜ், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் பலியான டாக்டர் ரவிகுமரன் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் துரையப்பாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைக்-ஆட்டோ மோதல் கட்டட தொழிலாளி பலி

தென்காசியில் பைக் மீது ஆட்டோ மோதியதில் கட்டட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.தென்காசி செங்கோட்டை ரோடு வாலிபன் பொத்தையை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோணி (27). கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் ஆய்க்குடியில் இருந்து தென்காசி வந்து கொண்டிருந்தார். ஆளில்லாத ரயில்வே கிராசிங் அருகே வந்த போது எதிரே வந்த ஆட்டோ திடீரென பைக் மீது மோதியது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த மைக்கேல் அந்தோணி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் திருப்பதி விசாரணை நடத்தி அகரக்கட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேவியர் ஆரோக்கியசாமி (27) என்பவரை கைது செய்தார். விபத்தில் பலியான மைக்கேல் அந்தோணிக்கு விண்ணரசி (25) என்ற மனைவியும், அந்தோணி ராகுல் (5) என்ற மகனும், அன்சிலின்மேகா (3) என்ற மகளும் உள்ளனர்.தென்காசி-ஆய்க்குடி ரோட்டில் இரவு நேரம் அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்த ரோடு அதிகமான வளைவுகளை கொண்டதாகவும், குறுகலானதாகவும் இருப்பதால் விபத்து நடப்பதாக கூறப்படுகிறது. இந்த ரோட்டை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையநல்லூரில் இறகு பந்து போட்டி

கடையநல்லூரில் இறகுபந்து போட்டி நடந்தது.புளியங்குடி ரோட்டரி சங்கம், புளியங்குடி இறகுபந்து ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியன இணைந்து நடத்திய இறகு பந்து போட்டி கடையநல்லூர் உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. புளியங்குடி வர்த்தக சங்க தலைவர் காஜா முகைதீன் முன்னிலை வகித்தார். இறகுபந்து விளையாட்டு போட்டியை ரோட்டரி சங்க துணை கவர்னர் பாலாஜி கிரானைட்ஸ் சங்கரநாராயணன் துவக்கி வைத்தார்.போட்டியில் முதல் பரிசுகளை கண்ணன், சுரேஷ் ஆகியோரும், இரண்டாம் பரிசுகளை அபுசாலி, கண்ணன் ஆகியோரும் பெற்றனர். 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான இறகுபந்து போட்டியில் முதல் பரிசை காஜாமுகைதீன், எஸ்.டி.ஏ.பள்ளி சுரேஷ் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் புளியங்குடி ரோட்டரி சங்க தலைவர் முருகையா, செயலாளர் பிச்சையா, வேளாண்மை உதவி இயக்குனர் முருகானந்தம், டி.டி.சாமி மற்றும் கடையநல்லூர், புளியங்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடையநல்லூரில் அதிகரித்து வரும் பாம்புகள் கண்டுகொள்ளுமா நகராட்சி நிர்வாகம்

கடையநல்லூரில் அதிகரித்து வரும் பாம்புகள் கண்டுகொள்ளுமா நகராட்சி நிர்வாகம் 



கடையநல்லூர் நகராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நகராட்சித் தலைவி கொடியற்றினர்

கடையநல்லூர் நகராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நகராட்சித் தலைவி கொடியற்றினர்





புதன், 25 ஜனவரி, 2012

புளியங்குடி அருகே அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம கும்பலுக்கு வலை


நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டை வழியாக ஆலங்குளத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ் சொக்கம்பட்டி அருகே உள்ள புன்னைவனம் வந்த போது, ஒரு மர்ம கும்பல் பஸ் மீது கல்வீசி தாக்கி விட்டு, ஒரு பெட்ரோல் குண்டையும் பஸ் மீது வீசியது.
 

இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. பெட்ரோல் குண்டு பஸ்சில் விழுந்து எரிந்ததில் பஸ்சின் இருக்கைகள் தீப்பிடித்தது. உடனடியாக பஸ்சின் டிரைவர் சரவணன், கண்டக்டர் செல்வமணி மற்றும் பயணிகள் தீயை அணைத்தனர். பஸ்சில் கூட்டம் குறைவாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. 
 
உடனடியாக சம்பவ இடத்துக்கு எஸ்.பி.விஜயேந்திர பிதரி, டி.எஸ்.பி. ஜமீம் மற்றும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம கும்பலையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
 
அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பசுபதிபாண்டியன் கொலைக்கு கண்டனம் தெரிவித்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பசுபதிபாண்டியன் ஆதரவாளர்கள் யாரேனும் உள்ளனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு நெல்லை புறநகர் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலையும் புறநகர் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை 7 மணிக்கு பிறகே அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம் போல் பஸ்கள் புறப்பட்டு சென்றன
.

கடையநல்லூர் அருகே பரபரப்பு போலீசாருடன் பிரச்சினை ஏற்பட்டதால் தேரை நடுரோட்டில் நிறுத்தி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்:

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் முப்புடாதி யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேரோட்டம் நேற்று(23-ந்தேதி)மதியம் 2மணிக்கு நடந்தது. தேர் முக்கிய வீதிகளின் வழியாகவந்து தென்காசி-மதுரை மெயின் ரோட்டிற்கு வந்தடைந்தது. 





வழக்கமாக தேரை மெயின் ரோட்டில் நிறுத்தி தேங்காய் உடைப்பது வழக்கம். அதேபோல் தேங்காய் உடைப்பதற்காக மெயின் ரோட்டில் தேர் நிறுத்தப்பட்டது. 

ஆனால் மெயின்ரோட்டில் தேரை நிறுத்தி தேங்காய் உடைக்கக்கூடாது என்று போலீசார் கூறினர். ஆனால் பொதுமக்களோ, கடந்த 50ஆண்டுகளாக தென்காசி- மதுரை மெயின்ரோட்டில் தேர் நிறுத்தப்பட்டு தேங்காய் உடைத்து வருகிறோம். அந்த நடைமுறையை மாற்ற முயற்சிக்கக்கூடாது என்று கூறினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து தேரோட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் தென்காசி-மதுரை மெயின் ரோட்டிலேயே தேரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். 

இந்நிலையில் தேரோட்டத்தில் சிலம்பாட்டம் ஆடிய வாலிபர்களை போலீசார் தடுத்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்ற வாலிபரை போலீசார் பிடித்துச்சென்றனர். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் தென்காசி தாசில்தார் ராசையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்டோர் கிருஷ்ணாபுரம் பகுதி சமுதாயத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் பிடித்துச் சென்ற வாலிபரை விடுவிக்க வேண்டும் என்று கூறினர். 

அதன்பேரில் பிடித்துச் செல்லப்பட்ட வாலிபரை போலீசார் விடுவித்தனர். அதன்பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த தேர் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. 

தேர் இரவு 7 மணியளவில் நிலைக்கு வந்தடைந்தது. நடுரோட்டில் தேரை நிறுத்தி பொதுமக்கள் நடத்திய இந்த மறியல் போராட்டத்தால் தென்காசி-மதுரை மெயின் ரோட்டில் இருபுறமும் நீண்ட வரிசையில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 

மறியல் போராட்டம் முடிந்து தேர் நிலைக்கு சென்றபிறகே அவ்வழியாக வாகனங்கள் அனுப்பப்பட்டன. இதனால் தென்காசி-மதுரை மெயின்ரோட்டில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேம் 999 சோஹன் ராயின் ஆஸ்கர் கனவு பொய்த்துவிட்டது.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து சென்ற சோஹன் ராயின் டேம் 999 படம் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை.

முல்லைப் பெரியாறு அணை குறித்து தேவையில்லாமல் பீதியைக் கிளப்பும் வகையி்ல எடுக்கப்பட்ட படம்தான் இந்த டேம் 999. கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்பவர் வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் நிதியுதவி மற்றும் கேரள அரசின் ஆதரவோடு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்.

84வது ஆஸ்கர் விருதுப் போட்டியில் டேம் 999 படமும் கலந்து கொண்டது. இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாமுயல் கோல்டுவின் தியேட்டரில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் டேம் 999 இல்லை.

முல்லைப் பெரியாறு அணை உடைந்து பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவது போன்று எடுக்கப்பட்ட படம் டேம் 999. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டேம் 999 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சிறந்த படம், பாடல்கள் மற்றும் ஒரிஜினல் இசை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆயினும் இறுதிப் பட்டியலில் இடம்பெறத் தவறியுள்ளதால் சோஹன் ராயின் ஆஸ்கர் கனவு பொய்த்துவிட்டது.

தி ஆர்டிஸ்ட், தி டிசென்டன்ட்ஸ், தி ஹெல்ப், ஹ்யூகோ, மணிபால் உள்ளிட்ட படங்கள் தான் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடக் தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கின்றது.

இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

நிலநடுக்கம் ஏற்படும், முல்லைப் பெரியாறு உடையும் என்று கேரளக்காரர்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த டேம் 999 'ஆஸ்கர் நிலநடுக்கத்தில்' சிக்கி உடைந்து போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

கடையநல்லூரை சேர்ந்த அவுச்சாரி ரஹ்மத்துல்லாஹ் ஜித்தாவில் மரணம்.


கடையநல்லூர் அல்லிமூப்பன் தெரு அவுச்சாரி நாகூர் மிரான் அவர்களின் மகன் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் 23.01.2012(இரவு) திங்கள் கிழமை அன்று சவூதி அரேபிய ஜித்தாவில் உடல் நல குறைவின் காரணமாக வபாதாகி விட்டார்கள் என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தார்க்கு என்னுடையே ஆழ்ந்த இரங்கலை தெரிய படுத்துகி
றோம்.

பஹ்ரைனில் விஷவாயு தாக்கிய 4 இந்தியர்கள் பலி-ஒருவர் கவலைக்கிடம்

பஹ்ரைனில் பணிபுரிந்து வந்த 4 இந்தியர்கள் கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஹ்ரைனில் உள்ள ஹமாத் நகரில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த கேரளாவை சேர்ந்த 5 பேர் ஒரே அறையில் தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக பஹ்ரைனில் கடும் குளிர் நிலவுகின்றது. இதனால் அறையில் குளிரை போக்கும் வகையில், 5 பேரும் நேற்று முன்தினம் இரவு தூங்க செல்லும் முன், பெயிண்ட் டிரம் ஒன்றில் சில மரக்கட்டைகளை போட்டு தீ மூட்டினர்.

அதன்பிறகு 5 பேரும் படுத்து தூங்கினர். இந்த நிலையில் நேற்று காலையில் 5 பேரும் பணிக்கு செல்லவில்லை. இதில் சந்தேகமடைந்த மற்ற பணியாளர்கள், 5 பேரும் தங்கி இருந்த அறைக்கு வந்து பார்த்தனர். அப்போது அறையில் 5 பேரும் மயங்கிக் கிடந்தனர். இதையடுத்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவ பரிசோதனையில் சுரேஷ் பாபு (45), பிரியேஷ்(27), நகுலன்(48), லாலு தைதலா (37) ஆகிய 4 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த சுனில் சசிதரன் (53) என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 4 பேரும் அறையில் கார்பன் மேனாக்சைடு வாயு தாக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானதாக பரிசோதனையில் தெரிய வந்தது.

சீனிவாசன் ,சாம் ஆண்டரசனுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்...


இந்திய நடிகர் பவர் ஸ்டாரின் சுறு சுறுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்...அவருடைய சண்டையோடு கலந்த ஹுயூமர் மிகவும் பிடித்தமானது.

ஹீரோவும் நன்றாக கற்பழிப்பான் ,உதைவாங்குவான் என்று உலகுக்கு தெரிவித்தவர்...காரணம் ஹீரோ சாதாரனஆள் அல்ல என்பதை சொல்ல அது போலான காட்சிகள் அமைத்தவர்... விளிம்புநிலையில் இருந்து போராடி உலகின் சூப்பர் ஸ்டாராக வளம்  வந்த அந்த வெறிப்பித்த  உழைப்பு பிடிக்கும்...அதனாலே பவர் ஸ்டார் என்று எனது பூனைக்கு பெயர் வைத்துக்கொண்டேன்....



அதன் பிறகு எனக்கு பிடித்த நடிகர் சாம் ஆன்ட்ரசன் .. எனக்கு அவரின் நடிப்பு. பிடித்தமானது.. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அந்த தேடல் அவரிடம் எனக்கு மிக பிடித்த ஒன்று... அவருடைய படத்தில் வந்த பாடல்கள் எனக்கு பிடிக்கும் பன்முக திறமைக்கொண்ட கலைஞன்...அதனால் சாம் பிடிக்கும்...வலையில் சின்ன பசங்க போட்டுக்கொள்ளும் சண்டை போல சாமுக்காக இரண்டு பெரிய பதிவுகள் எழுதியவன்... அது எல்லோருக்கும் தெரியும்..




மேலே சொன்ன இரண்டு ஆண்களை தவிர எனக்கு மற்றும் ஒரு நபரை பிடிக்கும் அவர் மங்கோலியா சூப்பர் ஸ்டார் பிம்பிளிகிபிலாப்பி ...  சாரி பிரின்ஸ் மகேஷ்பாபு என்றுதான் சொல்ல வேண்டும்.. இவ்வையென்றால் மாங்கிச்தான் பாயாசான் கோபித்துக்கொள்வார்கள்..


சின்ன வயதில் ராமராஜன் வெறிப்பிடித்த ரசிகராக இருந்த போது அவரின் ஸ்டைல்  பிடிக்கும்.. அதன் பிறகு பவர் ஸ்டார் ஸ்டைல்தான் பிடிக்கும்....சாமின் ஸ்டைல் பெரியதாக என்னை கவரவில்லை.. ஆனால் ரொம்ப நாளைக்கு பிறகு யாருக்கு யாரோ  படத்தில் சாமின் ஸ்டைல் மற்றும் மேனாரிசங்களை நிரம்பவே ரசித்தேன்... அதன் பிறகு யாரையும் ரசிக்கவில்லை..அந்த வெற்றிடம் ரொம்ப காலியாகவே இருந்தது....


ஆனால் சில வருடங்களுக்கு முன் மங்கோலிய சீரியல் ஒர்க் செய்து இருப்பதால் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் எனக்கு  சுந்தர மங்கோலியா புரிய ஆரம்பித்தது... அதுக்கு முன்னே.. ஆமி பாக்கட சாய்வு .. இதுதான் எனக்கு தெரிந்த மங்கோலியா ...


 யாருக்கு யாரோ படத்தில் படத்தின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதே போல ஸ்னேஹா   மற்றும் சாயாக்கட சரசு படங்களின் அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்தமானவை
எனக்கு பிடித்த மற்றொரு  பாடல்...


அதே போல பல நாட்கள் யாருக்கு யாரோ படத்தில் வரும் இந்த பாடலை முனு முனுத்துக்கொண்டு இருந்தேன்.. முக்கியமாக சாமின் ஸ்டைல் இந்த பாடலில் எனக்கு ரொம்ப பிடிக்கும்..


எச்சரிக்கை : தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யான் எண்டு ஒரு அனானி உலவி வருவதாக கேள்வி பட்டேன் அவருக்கு என் கண்டனங்கள் 


நன்றிகளுடன்