கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 3 மார்ச், 2012

கடையநல்லூர் பகுதியில் கடும் வெயிலால் சாலையோரங்களில் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் ஜூஸ் கடைகள் (பட‌‌ம்)

கடையநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெ‌‌யி‌ல் ம‌க்களை வா‌ட்டி வருவதா‌ல் சாலையோர‌ங்க‌ளி‌ல் ஜூ‌ஸ் கடைக‌ள் அ‌திக‌ரி‌த்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளன.

கடையநல்லூர் பகுதியில் கடந்த பத்து நாட்கள் வரை கடும் குளிர் வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் காலை எட்டு மணி வரை வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவு குளிர் இருந்தது. ஆனால் கடந்த பத்து நாட்களாக நேர்மாறாக தட்பவெட்பம் மாறிவிட்டது. தற்போது கடும் வெப்பம் வீசி வருகிறது.

இந்த வெயிலின் காரணமாக விவசாயிகள், மூட்டை  தூக்கும் தொழிலாளிகள் மற்றும் கிராமம், கிராமமாக சென்று பொருட்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளி செல்லும் குழந்தைகைளும் இந்த கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்த கடும் வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் ஜூஸ் கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது  கடையநல்லூர் பகுதியில் உள்ள ரோடுகளின் ஓரத்தில் புதியதாக தள்ளுவண்டிகளில் ஜூஸ் கடைகள் உருவாகியுள்ளது.

இந்த ரோட்டோர ஜூஸ் கடைகளில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் ரூ.15 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே கடைகளில் சென்று குடித்தால் ஒரு டம்ளர் ஜூஸ் ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரோட்டோர கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக