கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 6 மார்ச், 2012

கடையநல்லூரில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை


கடையநல்லூரில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடையநல்லூரை அடுத்த கிருஷ்ணாபுரம் செவல்விளை மறுகால் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சின்னத்துரை (30). இவருக்கும், சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துமாரி (22) என்பவருக்கும் திருமணமாகி காவியா என்ற குழந்தை உள்ளது. சின்னத்துரைக்கும், முத்துமாரிக்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முத்துமாரி சொக்கம்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து வந்தாராம்.

நேற்று காலை சின்னத்துரை முத்துமாரியை தனது வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் முத்துமாரி வர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சின்னத்துரை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சின்னத்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக