கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 13 மார்ச், 2012

எஸ்.எஸ்.எல்.சி பிராக்டிக்கல் தேர்வு வினாக்களை மாணவர்களே குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் வசதி


எஸ்.எஸ்.எல்.சி பிராக்டிக்கல் தேர்வு வினாக்களை மாணவர்களே குலுக்கல் முறையில் தேர்வு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவியல் பிராக்டிக்கல் தேர்வுகள் வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. செய்முறை தேர்வுக்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வர்களாகவும், வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் புற தேர்வர்களாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி எழுத்து தேர்வில் குறைந்த பட்சம் 20 மார்க்குகளும், செய்முறை தேர்வில் குறைந்தபட்சம் 15 மார்க்குகளும் பெற வேண்டும். பிராக்டிக்கல் தேர்வு கால 9 மணி முதல் மதிம் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் நடத்தப்படும்.
செய்முறை தேர்வுக்கான வினாக்களை குலுக்கல் முறையில் மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். பிராக்டிக்கல் தேர்வில் புற மதிப்பீடாக 20 மார்க்குகளும், அக மதிப்பீடாக 5 மார்க்குகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி பிராக்டிக்கல் தேர்வுகள் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இருக்க வேண்டும். இதில் ஏதாவது தவறுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரே பொறுப்பாவார்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 10.75 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். வரும் ஏப்ரல் மாதம் இந்த மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக