கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 6 மார்ச், 2012

கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோயிலில் ருத்ர ஹோமம்


கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த ருத்ர ஹோமம் நிகழ்ச்சியில் திருவாடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார்.

கடையநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் கரும்பால் மொழி உடனுறை கடகாலீஸ்வரர் கோயிலில் ருத்ர ஏகாதசி ஜெபம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், ருத்ர ஏகாதசி ஜெபம், ருத்ர ஹோமம், அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு ருத்ர அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடகாலீஸ்வரர் மற்றும் கரும்பால்மொழி அம்பாள், சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது.

ருத்ர ஏகாதசி ஹோமம் வைபவத்தில் திருவாடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பராமச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். முன்னதாக குருமகா சன்னிதானத்திற்கு கோயில் திருப்பணிக் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பணிக் குழுவை சேர்ந்த சொக்கலிங்கநாடார், புலவர் பெரியசாமி, நல்லமுத்து ஆசாரி, ராமசாமிநாயுடு, சுப்பிரமணியன், செல்லப்பா, கேசிஎன் முருகையா, மாடசாமி மற்றும் பலர் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

ருத்ர ஹோம வேள்வி நிகழ்ச்சியில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், கோயில் பட்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கடையநல்லூர், மேலக்கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், முத்துகிருஷ்ணாபுரம், தென்காசி, இடைகால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக