சிங்கப்பூர் பட விழாவில் 5 விருதுகளை அள்ளியிருக்கிறது அஜித்தின் மங்காத்தா படம். சிங்கப்பூரில் சமீபத்தில் சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படமும் இடம்பெற்றது. சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மங்காத்தா படத்திற்கு, சிறந்த இயக்குனர் விருது, சிறந்த ஒளிப்பதிவாளர் விருது, சிறந்த பாடகி விருது, சிறந்த துணை நடிகர் விருது ஆகிய 5 விருதுகளும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் இசையமைப்பாளரும், டைரக்டருமான கங்கை அமரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. மேலும் வானம் படத்திற்காக சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரௌத்திரம் படத்திற்காக ஸ்ரேயாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த வளர்ந்து வரும் நடிகருக்கான விருது எங்கேயும், எப்போதும் படத்துக்காக ஜெய்க்கு கிடைத்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரேயா, ஹன்சிகா மோத்வானி, சந்தியா, மேக்னா நாயுடு உள்ளிட்டோரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக