என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன் என்று முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும், மாணவனையும், கடும் சிரமத்திற்குப் பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
இருவரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பின்னர் குமுதுவை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை சிறார் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர்.
மைனர் பையனை கூட்டிச் சென்றதால் ஆசிரியை குமுது மீது கடத்தல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். மாணவனுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மாணவனைப் பிரிந்து பெரும் வேதனையில் இருக்கிறாராம் ஆசிரியை குமுது. இதுகுறித்து அவர் சிறை அதிகாரிகளிடம் கூறுகையில், நாங்கள் பழகுவதில் இத்தனை சட்ட சிக்கல் இருக்கும் என தெரியவில்லை. இருந்தாலும் மாணவனுக்கு 21 வயது ஆகும் வரை நான் காத்திருப்பேன்.
வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன். மாணவனை என் மகன் போல் பார்த்து கொள்வேன். என்னை, மாணவன் நெடுநாள் பிரிந்து இருக்க மாட்டான் என்கிறாராம் ஆசிரியை குமுது.
குமுது வட மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள பள்ளியில் இந்தி ஆசிரியையாக இருந்து வந்தார். அவர் வேலை பார்த்த பள்ளியில் பிளஸ் ஒன் படித்தவன்தான் அந்த 17 வயது மாணவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக