கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 2 மார்ச், 2012

நெல்லை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு

நெல்லை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடர்வதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாக சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலான மின் தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த மின் வெட்டை குறைக்க மின் வாரியம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி மாவட்டங்களில் 4 மணி நேரம் மட்டுமே மின் தடை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் இந்த அறிவிப்புக்கு பிறகும் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பல மணி நேரம் மின் தடை நீடித்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இந்த குளறுபடிகளின் காரணமாக எப்போது மின்சாரம் வரும், எப்போது மின்சாரம் போகும் என்ற விபரங்களை தெரிந்து கொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். இதனால் மின்சாரத்தை நம்பி எந்தவித வேலையையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ராகுல் காந்தி ரத்த தான கழக நிறுவன தலைவர் பிரம்மா கூறும் போது, ""பாளை கே.டி.சி நகர் தினமும் 12 முறைக்கு மேல் மின் தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக சில பகுதிகளில் மட்டும் சீரான மின் சப்ளை செய்யப்படுகிறது. எனவே, ஒவ்வொரு பகுதிகளிலும் மின்வாரியம் மூலம் மின் தடை குறித்து ஏற்கனவே முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக