கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 16 மார்ச், 2012

100வது சதமடித்தார் சச்சின் டெண்டுல்கர்



பல்வேறு கிரிக்கெட் சாதனைகளை தனது பாக்கெட்டில் வைத்துள்ள சச்சின் டெண்டுல்கர்,  ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 100வது சதத்தையும் எடுத்து சாதனை படைத்துவிட்டார்.


எப்போது 100வது சதமடிப்பார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தே விட்டது. அடித்துவிட்டார் சச்சின் 100வது சதத்தை. இந்த சாதனை பங்களாதேஷ் நாட்டின் மிர்புர் நகரில் உள்ள ஸ்ரீ பங்களா விளையாட்டு மைதானத்தில் நிகழ்த்தியுள்ளார்.


138 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்சருடன் சச்சின் இந்த சதத்தை எட்டியுள்ளார்.
99வது சதத்தை எடுத்து முடித்த பிறகு ஏறக்குறைய ஓராண்டிற்கு பிறகு 100வது சதத்தை எடுத்துள்ளார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியா 44 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக