கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 22 மார்ச், 2012

கடையநல்லூர் பகுதியில் நெல்லுக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தவிப்பு

கடையநல்லூர் பகுதியில் தற்போது நெல் அறுவடை தீவிரமாகி வருகிறது. நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர். 
கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் விவசாயத்தை நம்பி வாழும் பகுதியாகும். இங்கு நெல், சோளம் மட்டுமின்றி தக்காளி, கத்தரி, வெண்டை ஆகியவையும் பயிரிடப்படுகிறது. அத்துடன் இப்பகுதி யில் திராட்சையும் விளைந்து வருகிறது.  ஆண்டுதோறும் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக் கான ஏக்கரில் கார் மற்றும் பிசான பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது. கர்நாடகா, பெல்லாரி, அம்பை 16 போன்ற பல்வேறு ரக நெல் இப்பகுதியில் பயிரிடப்படும். 
தற்போது இந்த பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை நடந்து வருகிறது. ஆனால் நெல்லுக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தவிக்கின்றனர். ஆயிரம் ரூபாய்க்கு விற்ற 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல் தற்போது 650 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனையாகிறது.  சேமித்து வைத்து விற்க வழி இல்லாததால் வியாபாரிகள் கேட்கும் குறைந்த  விலைக்கு நெல் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர். 
மேலும் குறைந்த விலையில் கொடுத்த போதிலும் 3 மாதம் கழித்து பணம் தருவதாக பல வியாபாரிகள் கூறுவதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.  75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல் 650 ரூபாய்க்கு விற்ற போ திலும் கர்நாடாக பொன்னி அரிசி 1 கிலோ 30 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். நெல் லுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடையநல்லூர் பகுதி விவசாயிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக