கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 13 மார்ச், 2012

தென்காசி மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: முஸ்லிம் லீக்

தென்காசி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக் கட்சியின் இளைஞரணி மாநில இணைச் செயலர் எம். முகம்மதுஅலி கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தென்காசி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலப் பணி 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும் பணிகள் முடியவில்லை. புதிய, பழைய பஸ் நிலையங்கள், திருவள்ளுவர் திடல் என மூன்று பஸ் நிலையங்கள் செயல்டுவதால் எந்த ஊருக்கு எங்கிருந்து செல்வது என மக்களிடையே இன்னமும் குழப்பம் உள்ளது.
மாநில அரசின் கீழ் நடைபெறும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆனால், மத்திய அரசு ரயில்வே துறையின்கீழ் நடைபெறும் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடியவில்லை.
பணிகளை விரைந்துமுடிக்காவிட்டால் கட்சித் தலைமையின் வழிகாட்டுதல்படி போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக