கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 16 மார்ச், 2012

ரஹ்மான் இசையில் ர‌ஜினி பாடினார்

ர‌ஜினி பாடப் போவதாக ஒரு செய்தி வெளியிட்டிருந்தோமல்லவா? அது பொய்யா மெய்யா என்ற சந்தேகத்தை கோச்சடையான் டீமே தீர்த்து வைத்திருக்கிறது.
FILE

மன்னன் படத்தில் 21 வருடங்களுக்கு முன் ர‌ஜினி பாடினார். அதன் பிறகு அவர் எந்தப் படத்திலும் பாடவில்லை. தற்போது ரஹ்மான் இசையில் கோச்சடையான் படத்துக்காக பாடியுள்ளார். வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ச‌ரித்திர நிகழ்வு நடந்த போது ரஹ்மான், ர‌ஜினியுடன் வைரமுத்து, படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ஆகியோரும் உடனிருந்தனர். கோச்சடையான் ஆடியோ சிடி விற்பனை அடித்து தூள் கிளப்பப் போவதை இப்போதே உணர முடிகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக