கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 3 மார்ச், 2012

நடிகர், நடிகைகளும் தேர்தல் களத்தில் சூடு பிடிக்கிறது சங்கரன்கோவில் தொகுதி

சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்காக திமுக முக்கிய நிர்வாகிகள், நடிகர்கள், நடிகைகள் வருகின்றனர்.

சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளராக ஜவகர் சூர்யகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வரும் 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் திமுக பொது செயலாளர் அன்பழகன் பிரசாரம் செய்கிறார். வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடிகை குஷ்பூ, வரும் 10ம் தேதி வாகை சந்திரசேகர், வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை திமுக பொருளாளர் ஸ்டாலின், வரும் 15ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரசாரத்திற்கு வருகின்றனர்.


நடிகர் குமரி முத்து, காங்., தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் தேர்தல் பிரசாரத்திற்கு சங்கரன்கோவில் வருகின்றனர்.
இப்பிரசாரங்களுக்கான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக