கடையநல்லூரில் பகலில் ஒளிவிடும் தெருவிளக்குகளால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். கடுமையான மின்தடைக்கு மத்தியில் பகலில் எரியும் தெருவிளக்குகள் பொதுமக்களை எரிச்சலைடைய செய்துள்ளது.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களின் நலனுக்காக முக்கிய பகுதிகளில் ஹைமாஸ் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை பொறுத்தவரை மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை எரிவதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. இருந்தபோதிலும் மேலக்கடையநல்லூர் மற்றும் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை மெயின் பகுதி, சேர்ந்தமரம் பஜார் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பல இடங்களில் தெருவிளக்குகள் பகலில் எரிந்து கொண்டே இருப்பதாக பொதுமக்களால் புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுநல அமைப்புகளும், முக்கிய அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் புகார் தெரிவித்து வந்த போதிலும் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தையே கடுமையாக பாதிப்படைய செய்து வரும் மின்தடைக்கு மத்தியில் பகலில் ஒளிவிடும் நகராட்சி தெருவிளக்குகளால் பொதுமக்கள் கடும் எரிச்சலும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக