கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 13 மார்ச், 2012

குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் சாரல் மழை


குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் முதல் கட்ட சீசன் காலங்களாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களும், ஐப்பசி மாத இறுதி முதல் கார்த்திகை, மார்கழி, தை வரை இரண்டாவது கட்ட சீசன் காலங்களாக கருதப்பட்டு வருகிறது. முதல் கட்ட சீசனின் போது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 26 முதல் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வந்து சீசனை அனுபவித்து செல்வது வழக்கம்.


இரண்டாவது கட்ட சீசனின் போது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாலை அணிவித்து விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். கடந்த காலங்களில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் கடும் வறட்சி நிலவி காணப்படும். காற்றுக்காக மரங்கள் கூட அசையாது. வெப்பமும் அதிகரித்து காணப்படும்.


ஆனால் தற்போது மார்ச் மாதம் துவங்கிய முதல் வாரத்திலேயே குற்றாலம், செங்கோட்டை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் இரவு நேரங்களில் கடந்த 3 தினங்களாக சாரல் மழை பெய்து வருவதால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து காணப்பட்ட நிலையில் மழை பெய்து மனதுக்கு இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக