கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 27 மார்ச், 2012

கடையநல்லூரில் மீண்டும் சாக்கடை கலந்த குடிநீர்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டத்தை அடுத்து மீண்டும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடரும் சாக்கடை குடிநீரினால் நாளுக்கு நாள் பொதுமக்களிடம் பீதி அதிகரித்து வருகிறது. 

நெல்லை மாவட்டத்திலேயே அதிக மக்கள் வசிக் கும் கடையநல்லூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும். வருட வருமானம் 4 கோடி ஈட்டும் கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் அனுபவிக்கும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் கடையநல்லூர் பகுதி யில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் பொதுமக்கள் குடிநீருக்கு நீர்நிலைகளை தேடி அலைகின்றனர். 


அத்துடன் எப்போதாவது கிடைக்கும் குடிநீரிலும் சமீப காலமாக சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்கள் தொற்று நோய் பர வும் பீதியில் உள்ளனர். கடையநல்லூர் பகுதியில் காய்ச்சல், வாந்தி பேதி போன்ற நோய்களும் தலை தூக்கி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ள னர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரி நக ராட்சி அலுவலகம் முற்றுகையிடப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில் நேற்று 21, 22 மற்றும் 23ம் வார்டு பொதுமக்கள் தங் கள் பகுதிக்கு வினியோகிக்கப்பட்ட சாக்கடை கலந்த குடிநீருடன் நகராட்சி அலுவலகத்தை மீண்டும் முற்றுகையிட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் வந்தனர்


நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெற கடையநல்லூரில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. இதனால் மக்களை பழி வாங்கும விதமாக குடிநீர் திட்டத்தை விரைவுப்படுதுவதில் தமிழக அரசு மெத்தனத்தை கடைப்பிடிப்பதாக பொதுமக்களிடையே பரவலாக கருத்து நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக