கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 31 மார்ச், 2012

கடையநல்லூர் துராப் சைபுல்லா ஹாஜா தர்ஹா கந்தூரி விழா

கடையநல்லூர் துராப் சைபுல்லா ஹாஜா தர்ஹா கந்தூரி விழா





பெரிய தெரு மேல வட்டாரம் ஹஜிமா இஸ்மாயில் மீராள் அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள்

பெரிய தெரு மேல வட்டாரம் மர்ஹூம் ஹாஜி மைனாட்டி செய்யது மசூது சாஹிபு அவர்களின் மனைவியும் மைனாட்டி மீராஷா அவர்களின் தாயாருமான ஹஜிமா இஸ்மாயில் மீராள் அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள் 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஷா இன்று இரவு 8.30 மணியளவில் பெரிய தெரு நெய்னா முஹம்மது பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் 

வெள்ளி, 30 மார்ச், 2012

ஏப்.1 முதல் மின் கட்டண உயர்வு அமுல்


மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறையிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கு கட்டண உயர்வு எப்படி அமல்படுத்துவது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை வெளியிட மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
 
இன்று அறிவிக்கப்படும் மின்கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கடையநல்லூர் லயன்ஸ் சங்கங்களின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

கடையநல்லூர் லயன்ஸ் சங்கங்களின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கங்களுக்கு மாவட்ட லயன்ஸ் கவர்னர் வருகை நிகழ்ச்சி முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் நடந்தது. குற்றாலம் விக்டரி சங்க தலைவர் ராஜூ தலைமை வகித்தார். 

செவ்வாய், 27 மார்ச், 2012

கடையநல்லூரில் மீண்டும் சாக்கடை கலந்த குடிநீர்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டத்தை அடுத்து மீண்டும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடரும் சாக்கடை குடிநீரினால் நாளுக்கு நாள் பொதுமக்களிடம் பீதி அதிகரித்து வருகிறது. 

நெல்லை மாவட்டத்திலேயே அதிக மக்கள் வசிக் கும் கடையநல்லூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும். வருட வருமானம் 4 கோடி ஈட்டும் கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் அனுபவிக்கும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் கடையநல்லூர் பகுதி யில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் பொதுமக்கள் குடிநீருக்கு நீர்நிலைகளை தேடி அலைகின்றனர். 


அத்துடன் எப்போதாவது கிடைக்கும் குடிநீரிலும் சமீப காலமாக சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்கள் தொற்று நோய் பர வும் பீதியில் உள்ளனர். கடையநல்லூர் பகுதியில் காய்ச்சல், வாந்தி பேதி போன்ற நோய்களும் தலை தூக்கி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ள னர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரி நக ராட்சி அலுவலகம் முற்றுகையிடப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில் நேற்று 21, 22 மற்றும் 23ம் வார்டு பொதுமக்கள் தங் கள் பகுதிக்கு வினியோகிக்கப்பட்ட சாக்கடை கலந்த குடிநீருடன் நகராட்சி அலுவலகத்தை மீண்டும் முற்றுகையிட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் வந்தனர்


நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெற கடையநல்லூரில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. இதனால் மக்களை பழி வாங்கும விதமாக குடிநீர் திட்டத்தை விரைவுப்படுதுவதில் தமிழக அரசு மெத்தனத்தை கடைப்பிடிப்பதாக பொதுமக்களிடையே பரவலாக கருத்து நிலவுகிறது.

கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம்

கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம்














நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும்,பாதுகாப்பான,சீரான குடிநீர் விநியோகம் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 26.03.2012 அன்று மாலை 5 மணியளவில் கடையநல்லூர் நகராட்சி பூங்கா அருகில் வைத்து நடைபெற்றது.மாவட்ட செயலாளர் சகோ.செய்யது அலி அவர்கள் ஆர்பாட்டத்தை கோஷமிட்டு துவக்கி வைத்தார்.மாநில பேச்சாளர் சகோ.அப்துன் நாஸிர் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இறுதியில் கண்டன உரை நிகழ்த்திய மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.ஹாஜா நூஹ் அவர்கள் தனது உரையில் “கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டினால் ஏற்படுகின்ற அவலங்களை எடுத்துரைத்தார். இது போன்ற அவலங்கள் தொடர்ந்தால் மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.அல்லாஹ்வின் அருளால் ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

ஆர்பாட்டத்தின் இறுதியில் சகோ.ஹாஜா நூஹ் அவர்களின் தலைமையிலான குழுவினர் நகராட்சி மன்றத்திற்கு சென்று ஆர்பாட்ட கோரிக்கைகளை புகாராக ஆணையாளர் மற்றும் நகர்மன்ற தலைவர் ஆகியோர் இல்லாத காரணத்தால் நகராட்சி மேலாளரிடம் அளித்தனர்.

வெள்ளி, 23 மார்ச், 2012

கடையநல்லூர் ரோஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல் ஆண்டு விழா படங்களுடன்

கடையநல்லூர் ரோஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல் ஆண்டு விழா 


கடையநல்லூர் பஜார் ரோட்டில் அமைந்திருக்கும் ரோஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல் ஆண்டு விழா  கல்வத் நாயகம் தெருவில் இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் மாணவர்களும், பெற்றோர்களும் திரளாத மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் நிகழ்ச்சயில் மாணவ மாணவிகள் தங்களுடைய பல்வேறு  திறமைகளை விழா மேடையில் காண்பித்தார்கள்.












வியாழன், 22 மார்ச், 2012

கடையநல்லூரில் சூறாவளி காற்றுடன் மழை படங்களுடன்

கடையநல்லூரில் சூறாவளி காற்றுடன் மழை










'கடையநல்லூரில் இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் கருண்ட மேகமும் பலத்த காற்று புழுதியுடன் வீசியது அதன் பிறகு லேசான துளிகளுடன் மழை  நீடிதுக்கொன்டுடிருந்தது.

கடையநல்லூர் பகுதியில் நெல்லுக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தவிப்பு

கடையநல்லூர் பகுதியில் தற்போது நெல் அறுவடை தீவிரமாகி வருகிறது. நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர். 
கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் விவசாயத்தை நம்பி வாழும் பகுதியாகும். இங்கு நெல், சோளம் மட்டுமின்றி தக்காளி, கத்தரி, வெண்டை ஆகியவையும் பயிரிடப்படுகிறது. அத்துடன் இப்பகுதி யில் திராட்சையும் விளைந்து வருகிறது.  ஆண்டுதோறும் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக் கான ஏக்கரில் கார் மற்றும் பிசான பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது. கர்நாடகா, பெல்லாரி, அம்பை 16 போன்ற பல்வேறு ரக நெல் இப்பகுதியில் பயிரிடப்படும். 
தற்போது இந்த பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை நடந்து வருகிறது. ஆனால் நெல்லுக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தவிக்கின்றனர். ஆயிரம் ரூபாய்க்கு விற்ற 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல் தற்போது 650 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனையாகிறது.  சேமித்து வைத்து விற்க வழி இல்லாததால் வியாபாரிகள் கேட்கும் குறைந்த  விலைக்கு நெல் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர். 
மேலும் குறைந்த விலையில் கொடுத்த போதிலும் 3 மாதம் கழித்து பணம் தருவதாக பல வியாபாரிகள் கூறுவதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.  75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல் 650 ரூபாய்க்கு விற்ற போ திலும் கர்நாடாக பொன்னி அரிசி 1 கிலோ 30 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். நெல் லுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடையநல்லூர் பகுதி விவசாயிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கடையநல்லூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து கடையநல்லூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.கடையநல்லூர் பெரியபள்ளிவாசல், அரசு ஆஸ்பத்திரி சமீபம், கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப், மாவடிக்கால், மேலக்கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். 

புதன், 21 மார்ச், 2012

கடையநல்லூரில் 3 நாட்களாக நகை கடை அடைப்பு

கடையநல்லூரில் தங்க நகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி தங்கத்திற்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக நகை கடை வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.  கடையநல்லூரில் பெரும்பாலான தங்க நகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூரில் வெளிநாட்டு தங்க வியாபாரம் எப்போதுமே நன்றாக இருக்கும். 

வெளிநாட்டு தங்கத்தினை வாங்கிட வருகை தரும் வாடிக்கையாளர்களின் கூட்டமும் அதிகளவில் காணப்படும். தங்க நகைகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு விதிக்கப்பட்டதை கண்டித்து 3 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடந்து வந்த நிலையில் கடையநல்லூரில் ஒரு சில தங்க நகை கடைகள் திறக்கப்பட்டு வெளிநாட்டு தங்கம் வாங்கிட பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்து சென்றதை காண முடிந்தது. 




சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி


இந்தத் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக 5வது முறையாக வெற்றி பெற்று தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு 94,977 வாக்குகள் கிடைத்தன. 2வது இடத்தைப் பிடித்த திமுகவின் ஜவஹர் சூரியக்குமாருக்கு வெறும் 26,220 வாக்குகளே கிடைத்தன.

3வது இடத்தை மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 4வது இடத்தை தேமுதிகவின் முத்துக்குமாரும் பெற்றனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின. 




திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் வெல்லுங்கள் பார்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் சவால் விட்டிருந்தார். அந்தப் பின்னணியில் தேர்தல் நடந்திருப்பதாலும், மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்ததாலும் இந்தத் தேர்தலின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்:

முத்துச் செல்வி - அதிமுக - 94,977
ஜவஹர் சூரியக்குமார் - திமுக - 26,220
சதன் திருமலைக்குமார் - மதிமுக -20,678
முத்துக்குமார் - தேமுதிக - 12,144
முருகன்- பாஜக - 1633 

திங்கள், 19 மார்ச், 2012

17 வயது மாணவனைக் கடத்திக் கைதான ஆசிரியை பிடிவாதம்!என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது



என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன் என்று முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும், மாணவனையும், கடும் சிரமத்திற்குப் பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

இருவரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பின்னர் குமுதுவை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை சிறார் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர்.

மைனர் பையனை கூட்டிச் சென்றதால் ஆசிரியை குமுது மீது கடத்தல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். மாணவனுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மாணவனைப் பிரிந்து பெரும் வேதனையில் இருக்கிறாராம் ஆசிரியை குமுது. இதுகுறித்து அவர் சிறை அதிகாரிகளிடம் கூறுகையில், நாங்கள் பழகுவதில் இத்தனை சட்ட சிக்கல் இருக்கும் என தெரியவில்லை. இருந்தாலும் மாணவனுக்கு 21 வயது ஆகும் வரை நான் காத்திருப்பேன்.

வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன். மாணவனை என் மகன் போல் பார்த்து கொள்வேன். என்னை, மாணவன் நெடுநாள் பிரிந்து இருக்க மாட்டான் என்கிறாராம் ஆசிரியை குமுது.

குமுது வட மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள பள்ளியில் இந்தி ஆசிரியையாக இருந்து வந்தார். அவர் வேலை பார்த்த பள்ளியில் பிளஸ் ஒன் படித்தவன்தான் அந்த 17 வயது மாணவன். 

கடையநல்லூரில் பகலில் ஒளிவிடும் தெருவிளக்கு


கடையநல்லூரில் பகலில் ஒளிவிடும் தெருவிளக்குகளால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். கடுமையான மின்தடைக்கு மத்தியில் பகலில் எரியும் தெருவிளக்குகள் பொதுமக்களை எரிச்சலைடைய செய்துள்ளது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களின் நலனுக்காக முக்கிய பகுதிகளில் ஹைமாஸ் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை பொறுத்தவரை மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை எரிவதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. இருந்தபோதிலும் மேலக்கடையநல்லூர் மற்றும் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை மெயின் பகுதி, சேர்ந்தமரம் பஜார் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பல இடங்களில் தெருவிளக்குகள் பகலில் எரிந்து கொண்டே இருப்பதாக பொதுமக்களால் புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுநல அமைப்புகளும், முக்கிய அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் புகார் தெரிவித்து வந்த போதிலும் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தையே கடுமையாக பாதிப்படைய செய்து வரும் மின்தடைக்கு மத்தியில் பகலில் ஒளிவிடும் நகராட்சி தெருவிளக்குகளால் பொதுமக்கள் கடும் எரிச்சலும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

ஞாயிறு, 18 மார்ச், 2012

கடையநல்லுரின் சில வெளிப்புர புகைப்படங்கள்

கடையநல்லுரின் நேற்றைய சில வெளிப்புர புகைப்படங்கள்









புகைப்படங்கள் 
தஸ்லீம்