கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் ராகுல் நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா

கடையநல்லூரில் ராகுல் நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

கடையநல்லூரில் ராகுல் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, கக்கன்ஜி பிறந்த நாள் விழா, நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. காங்., பொதுக்கூட்டம் ராகுல் நற்பணி மன்ற தென்மண்டல பொறுப்பாளர் கே.எஸ்.கணேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட மன்ற தலைவர் குமாரசாமி பாண்டியன், மக்தூம், ஈஸ்வரி, புஷ்பா, குருசாமி, சக்தி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நலிவுற்றோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. முன்னாள் யூனியன் தலைவரும், மாவட்ட காங்., கமிட்டி பொதுச் செயலாளருமான அய்யாத்துரை, மாநில காங்., பேச்சாளர் சிவபெருமாள், பிச்சையா முதலியார், சுப்பையாபிள்ளை, நகர காங்., செயலாளர்கள் பட்டு, ரவி, முத்தையாகோனார், குருநாதன் மற்றும் பூஜைப்பாண்டி, தங்கராஜா ஆசாரி உட்பட பலர் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக