கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 1 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் பகுதியில் கடும் வறட்சி: குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தால் மக்கள் அவதி


கடையநல்லூர் பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக கிராமப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருவ மழையும் பெய்யாத நிலையில் கடுமையான வறட்சி காணப்பட்டு வருகிறது. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் கார் சாகுபடி நிலங்கள் பயிரிடப்படாத நிலையில் உள்ளன. கோடை வெயிலின் தாக்கத்தைவிட கடந்த மூன்று தினங்களாக கொளுத்தும் வெயிலினால் கடையநல்லூர் நீர்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக கடையநல்லூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டினை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைத்து கிராமங்களிலும் சீரற்று கிடக்கும் அடிபம்புகளை சரி செய்வது, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமான குடிநீரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அளவிற்கு விநியோகம் செய்வது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக