கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 22 ஆகஸ்ட், 2012

முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கும் பலர் கடையநல்லூர் பகுதி விஏஓ அலுவலகங்களில் அலைக்கழிப்பு

தமிழக அரசு ஆதரவற்ற முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள் உள்பட பல தரப்பினருக்கு மாத ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. ஆனால் புதிதாக மனு செய்யும் தகுதியுள்ள பலர் இத்தொகை கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுகின்றனர்.
முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கும் பலர் அலைந்து திரிந்து டாக்டரிடம் வயது சான்று  பெற்று விஏஓ, வருவாய் ஆய்வாளர்களிடம் சென்றால் அவர்கள் பல மாதங்கள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். 
மேலக்கடையநல்லூர் பகுதியில் இயங்கி வரும் விஏஓ மற்றும் வருவாய் ஆய் வாளர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை என புகார் கூறுகின்றனர். அலுவலகத்தில் இருந்தாலும் மனு கொடுப்பவர்களிடம் சரிவர விசா ரணை செய்யாமல் தட்டி கழிப்பதிலேயே உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர். வாரத்தில் முதல் நாளாவது விஏஓ அலுவலகத்தில் அலுவலர்கள் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்திய போதும் யாரும் இதை பொருட்படுத்துவதில்லை. இதுகுறித்து தாசில்தார், கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பல்வேறு நல உதவிகள் பெற நேரிடை யாக அலுவலர்களை பார்த்தால் கிடைக் காத சூழ்நிலையில் புரோக்கர்களிடம் சென்று பல ஆயி ரம் செலவழித்தால் காரியம் எளிதாக நடப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கடையநல்லூர் பகுதி விஏஓக்கள் ஏழை, எளிய ஆத ரவற்ற தகுதியான அனை வருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக