கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் மலையில் மூங்கில்கள் வெட்டி அழிப்பு சோலார் மின் வேலியும் செயல் இழப்பு ஊருக்குள் யானைகள் புகும் அபாயம்

கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சோலார் மின் வேலி செயலிழந்ததுடன்,  மூங்கில் கள் தொடர்ந்து வெட்டப்படுவதால் யானைகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
தமிழக-கேரள மாநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அரிய வகை விலங்குகள், மரங்கள், முலிகை செடிகளை கொண்ட இயற்கை வளம் மிக்க பகுதியாகும். இங்கு பறக்கும் அணில் போன்ற அபூர்வ வகை அணில்களும் பலதரப்பட்ட பறவைகளும் உள்ளன. ஏராளமான அருவிகளும், நதிகளும் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை நமக்கு தந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும். 
ஆனால் சமீபகாலமாக நெல்லை மாவட்டம் கடையநல் லூர், மேக்கரை, செங்கோட்டை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இயற்கை வளம் திட்டமிட்டு சமூக விரோத கும்பலால் தீவைத்து அழிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் மான், மிளா போன்ற உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. காடுகளை பாதுகாக்க வேண்டிய வனத்துறையினர் முழு ஈடுபாட் டோடு செயல்படாததா லும், பல நேரங்களில் காட்டை அழிப்பவர் களோடு கைகோர்த்து செயல்படுவ தாலும் காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.  
 செங்கோட்டை, மேக்கரை, கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூங்கில் அதிகம் வளர்ந்துள்ளது. இந்த வகை மூங்கில் யானைகளுக்கு உணவாவதுடன் நீர்பிடிப்புக்கு அதிகம் துணை செய்கிறது. 
இதனால் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். எனவே, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானைகள் உளிட்ட வன விலங்குகள் ஊருக் குள் வராத சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது இங்குள்ள மூங்கில்கள் நாள்தோ றும் நூற்றுக்கணக்கான தொழிலா ளர்களால் வெட்டப்பட்டு வருகிறது. 
இந்த வகை மூங்கில்கள் பெரிய வகை பைகளுக்கு கைப்பிடியாக பயன்படுத்தப்படுவதால் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் குவிந்த வண்ணம் உள்ளது.
இதனால் செங்கோட்டை, கடையநல்லூர் மலைப்பகுதியில் இந்த வகை மூங்கில் அதிக அள வுக்கு வெட்டி எடுத்து செங் கோட்டை பகுதிகளிலேயே சைஸ் செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக் கும் அனுப்பப்பட்டு வருகிறது. 
தினந்தோறும் லட்சக்கணக் கான ரூபாய் மதிப்பிற்கு மூங்கில்கள் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாக வன ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின் றனர்.
இதனால் தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் கூட்டமாக வந்து மலையடிவாரங்களில் உள்ள தென்னை, வாழை தோட்டங்களை அழித்து வருகின்றன. மேலும் விவசாய நிலங்களில் விலங்குகள் புகாமல் தடுக்க 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியும் செயல் இழந்து விட்டது.
இதனாலும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதாக விவசாயி கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்தியுள் ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக