கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் நலத்திட்ட உதவி வழங்கல்

கடையநல்லூரில் இண்டர்நேஷனல் மனித உரிமை கழகம் சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைவர் எட்வர்ட்ராஜன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் மணிகண்டன், மாநில புரவலர் பாலீஸ்வரன் முன்னிலை வகித்தனர். தென்காசி தாலுகா அமைப்பாளர் செல்வராஜ் வரவேற்றார். சங்கரன்கோவில் சுகாதார பணிகள் இயக்குநர் கிருஷ்ணலீலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மாவட்ட புரவலர் கருப்பசாமி, போக்குவரத்து பிரிவு அமைப்பாளர் சுடலையாண்டி, கிழக்கு மாவட்ட அமைப்பாளர் குருமூர்த்தி, மாநில புரவலர்கள் ராம ஐயப்பன், அபுதாஹிர், சாலமன் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன், அருணாசலம், முப்புடாதி, போக்குவரத்துதுறை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன. சென்னையில் பள்ளி வேனிலிருந்து விழுந்து பலியான சிறுமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடையநல்லூரில் பொதுமக்கள் நலன் கருதி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை 1வது பிளாட்பார்மில் நின்று செல்கு ரயில்வே டிவிஷனல் மேலாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செல்வராஜ் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக