கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 29 ஆகஸ்ட், 2012

எஸ்.எம்.எஸ். வதந்திகளை நம்பாதீர், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு வேண்டுகோள்...!


எஸ்.எம்.எஸ். வதந்திகளை நம்பாதீர், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு வேண்டுகோள்...!




கடந்த ஆகஸ்ட் 25,26 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கூடியது. இக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஏ. ஹாலித் முஹம்மது, துணை தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில். செயலாளர்கள் ஆரிஃப் பைசல் மற்றும் மு. ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர் கே.எஸ்.எம். இப்ராஹிம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்:

1. கடந்த ஜூலை மாதம் முதல் அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக கலவரங்கள் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 85 நபர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளளார்கள். மாநில அரசு பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையிலும் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்ப சென்ற மக்களும் தாக்கப்பட்டும் கொல்லப்படும் வருகிறார்கள். 2 மாதத்திற்கும் மேலாக கலவரத்தை அடக்கி சமூக நிலையை ஏற்படுத்தõதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் மதவாத பா.ஜ.க. மற்றும் சில கட்சிகளும் ஊடகங்களும் இந்த கலவரம் போடோ இன மக்களுக்கும் வங்காள தேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே நடப்பதாக கூறி வருவது மாநில அரசு கலவரத்தை முற்றிலும் அடக்க இயலாமைக்கு காரணமாக அமைகிறது. மேலும் அஸ்ஸாமில் வாழும் இந்திய முஸ்லிம்களையும் வங்க தேசத்தை சார்ந்தவராக குற்றம் சுமத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் சமுக விரோத சக்திகள் எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பிய வதந்திகளால் வட கிழக்கு மாநிலத்தவர்கள் பெருமளவில் பெங்களுர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களிலிருந்து அச்சத்தினால் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப சென்றுள்ளார்கள்.


இந்த பிரச்சனைகளை முற்றிலும் திசை திருப்பும் விதமாக சில ஊடகங்கள் இந்த வதந்தி பரப்பப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது வீண்பழி சுமத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்த வதந்தியை பரப்பி பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கிய தீய சக்திகளை நேர்மையான முறையில் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் செயற்குழு மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்துகிறது. மேலும் மக்கள் வீண் வதந்திகளை நம்பி பீதிவயப்படாமல் இருக்குமாறும் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


2. தமிழகத்தில் மொத்த இடஒதுக்கீடு 69% அமுலில் இருந்து வருகிறது. இந்த 69% இடஒதுக்கீட்டு வழக்கில் கடந்த ஜூலை 13 2012 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த 69% இடஒதுக்கீடு ஒரு வருடம் காலம் வரையே நீடித்தது. இது விஷயத்தில் மாநில அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் 69% இடஒதுக்கீடு வழங்கியதற்காக விளக்கம் கொடுக்குமாறு அறிவுறுத்தியது. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீதியரசர் எம்.எஸ். ஜனார்தனன் அவர்களது தலைமையில் கமிஷன் ஒன்றை நியமித்து ஆய்வு செய்து 69% இடஒதுக்கீட்டை தொடர வேண்டும் என்று கடந்த ஜூலை 13,2011ம் ஆண்டு மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டத்ததக்கது.


இந்நிலையில் கடந்த ஜூலை 14, 2012 அன்று இந்த 69% சதவீகித இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே மாநில அரசு 69% சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க தொடர்ந்து சட்டரீதியான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.


3. சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்! என்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒருமாத கால பிரச்சாரத்தின் இறுதி நாளான செப்டம்பர் 15 அன்று காலை 11 மணி முதல் 11.30 வரை தேசிய அளவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் செப்டம்பர் 15 அன்று சரியாக காலை 11 மணியிலிருந்து 11.30 மணிவரை அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் மனித சங்கிலி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இப்போராட்டத்தில் பொதுமக்கள் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் வைக்கிறது.


4. மதுவினால் ஏற்படும் பிரச்சனைகளையும் அழிவுகளையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துமாறு மாநில செயற்குழு கேட்டு கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக