கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடையநல்லூரில் பகல் நேரத்தில் வெயிலின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.கடையநல்லூர்  மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் விவசாய நிலங்கள் பயிர் சாகுபடி இல்லாமல் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. வறட்சி தாண்டவமாடி வருகிறது. இதனை அதிகரிக்கும் வகையில் பகல் நேரத்தில் வெயிலின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. அனல் பறக்கும் வெயிலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இரவு நேரம் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. "பவர் கட்' அதிகரிப்பதால் மக்கள் இரவு நேரம் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பகல் நேரத்தில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அனல் பறக்கும் வெயிலுக்கு விடை கொடுத்து, வறண்டு காணப்படும் நிலங்களை வளமான நிலமாக்க வருண பகவான் தான் கருணை காட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக