கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் காற்றாலைகளுக்கு அனுமதி பஞ்., தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

கடையநல்லூரில் காற்றாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என யூனியன் பஞ்., தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கடையநல்லூர் யூனியன் பஞ்., தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் புதுக்குடி பஞ்., தலைவர் கோபிராஜ் தலைமையில் நடந்தது. காசிதர்மம் பஞ்., தலைவர் ஆனைகுட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பஞ்., தலைவர்கள் ஆனைகுளம் கலீல்ரகுமான், போகநல்லூர் ராஜேந்திரன், சொக்கம்பட்டி பூபதிசந்தனபாண்டியன், இடைகால் செல்லப்பா, கம்பனேரி மூக்கையா, கொடிக்குறிச்சி முத்தையா, நயினாரகரம் டெய்சிராணி வள்ளிக்குமார், குலையநேரி சீதாபாலமுருகன், புன்னையாபுரம் ராமசுப்பு, பொய்கை மாடசாமி, நெடுவயல் பேபி சரோஜா, ஊர்மேலழகியான் முத்துலெட்சுமி குணசேகரன், வேலாயுதபுரம் முருகன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கடையநல்லூர் யூனியன் பகுதிகளில் நடந்து வரும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 132 ரூபாய் ஊதியம் உயர்வு கடந்த ஜூன் 5ம் தேதி முதல் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இடையூறு செய்யும் சில அரசியல் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாடு திட்டம் (தாய்) வேலைகளை பஞ்., மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கான டெண்டரையும் பஞ்., மூலமாகவே மேற்கொள்ள தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது.தமிழக முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் பயனாளிகளை பஞ்., நிர்வாகம் மூலமாக தான் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடையநல்லூர் யூனியனில் சில காரணங்களால் பயனாளிகளை தேர்வு செய்ய தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. எனவே தகுதியுள்ள பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயன் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளப்பட்டது.கடையநல்லூர் யூனியனுக்குட்பட்ட பஞ்.,களின் வருமானத்தை பெருக்கிடும் வகையில் காற்றாலை நிறுவனங்களுக்கு பஞ்.,சில் அனுமதி பெற உத்தரவிட கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக