கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மீண்டும் புத்துணர்ச்சியுடன் குற்றால அருவி


குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது.
குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏமாற்றிவிட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 20 நாட்கள் மட்டுமே சாரல் மழை பெய்தது. மேலும் ஒரு சில நாட்கள் கோடை காலத்தை போல் வெயில் அடித்தது. சீசன் தவறாமல் குற்றாலம் வரும் பழக்கமுள்ளவர்கள் இந்த ஆண்டு வரவில்லை. மேலும் சீசன் கால வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளு குளு சாரலுடன் அருவிகளில் நன்றாக தண்ணீர் கொட்டுகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதற்கிடையே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. தண்ணீரே விழாத பழைய குற்றால அருவியிலும், புலியருவியிலும் கூட தண்ணீர் நன்றாக விழுகிறது.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சுமாராகத் தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக