கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

சவூதி அரேபிய பாராலிம்பிக் அணியில் உள்ளோர் திருடர்கள்... நடிகரின் திமிர்ப் பேச்சு!


ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காமெடி நடிகர் பிராங்கி பாயில் என்பவர், பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள சவூதி அரேபிய அணியைப் பார்க்கும்போது திருடர்கள் போலத் தெரிவதாக கூறியுள்ளார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்காரர்களுக்கு மற்ற நாட்டவர்களை மட்டம் தட்டிப் பேசுவது என்றால் கிலோ கணக்கில் மஸ்கோத்து அல்வா சாப்பிடுவது போல. குறிப்பாக இனவெறிக் கருத்துக்களைக் கூறுவதற்கு அவர்கள் பயப்படவே மாட்டார்கள். அப்படி ஒருதிமிர்வாதம் பிடித்தவர்கள் அவர்கள். இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் பலமுறை இனவெறிக் கருத்துக்களைக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்டவர்.
இந்த நிலையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காமெடி நடிகர் பிராங்கி பாயில் என்பவர் சவூதி அரேபிய பாராலிம்பிக் அணியைச் சேர்ந்தவர்களை திருடர்கள் என்று டிவிட்டரில் விமர்சித்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். ஏற்கனவே இவர் பலமுறை திமிர்த்தனமாக பேசியவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லண்டனில் பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. அதுகுறித்து அவர் டிவிட்டரில் சில விஷமத்தனமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சவூதி அரேபிய அணியைப் பார்க்கும்போது அவர்களில் பலரும் திருடர்கள் போலவே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதாவது கை ஊனமுற்றோரைப் பார்த்துத்தான் இவ்வாறு திமிராகப் பேசியுள்ளார் பிராங்கி. திருட்டுத்தனம் செய்து அதற்குத் தண்டனையாக கைகளை வெட்டி தண்டனை கொடுத்துள்ளதைப் போல அவர்கள் இருக்கிறார்களாம். இதன் மூலம் சவூதி அரேபியாவில் கடுமையான தண்டனைகளை கொடுப்பதை சுட்டிக் காட்டுகிறாராம் இந்த காமெடி நடிகர்.
இவரின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஊனமுற்றோரையும், சவூதி அரேபிய சட்டத்தையும் இவர் அவமதித்துள்ளார், இழிவுபடுத்தியுள்ளார் என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
பிராங்கியைக் கடுமையாக கண்டித்து பலரும் டிவிட்டரில் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக