கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நெல்லை ஷீபா மருத்துவமனையில் சிறு ஊசி மூலம் இருதய சிகிச்சைகள்

நெல்லை ஷீபா மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 வயது குழந்தை உள்பட 10 பேருக்கு சிறு ஊசித்துளை மூலம் இருதய குறைபாடு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முகம்மது ஷாபி, இருதய மருத்துவ நிபுணர் ஸ்ரீநிவாசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நவீன முறையில் இருதய துவாரம் அடைத்தல், இருதய மகாதமணிக்கும் மாக சிறைக்கும் இடையே இருக்கும் இணைப்பை அடைத்தல், வால்வு சுருக்கத்தை பலூன் மூலம் சரி செய்தல் ஆகிய 3 வகையான  இருதய சிகிச்சைகள் 1 வயது குழந்தை உள்பட 10 பேருக்கு அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு 15 நிமிடங்களே போதும். மயக்க மருந்து தேவையில்லை. வலியிருக்காது, ஒரு நாள் மட்டும் தங்கியிருந்தால் போதும் அடுத்த நாளே வழக்கமான வேலைகளை பார்க்கலாம். மேலும் காப்பீட்டு திட்டத்தில் இது வரை 500 பேர் எங்கள் மருத்துவமனை மூலம் பலன்அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக