கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நெல்லை மாவட்டத்தில் 17 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

நெல்லை மாவட்டத்தில் 17 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் செய்யது அலி வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: 
தமிழகம் முழுவதும் நாளை (18ம் தேதி) பிறை பார்க்க வேண்டிய நாளாகும். ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாத பிறை தென்பட்டால் 19ம் தேதி ரம்ஜான் பண்டிகை நாளாகும். சனிக்கிழமை பிறை தெரியாவிட்டால் 20ம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை நாளாகும்.
ரம்ஜான் பண்டிகையன்று காலை 7 மணிக்கு நெல்லை மேலப்பாளையம், சந்திப்பு, பாளை., டவுன், பேட்டை, தாழையூத்து, ஏர்வாடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், பத்தமடை, அம்பை, சேரன்மகாதேவி, பொட்டல்புதூர், அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் ஈத்கா திடல்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது.
இந்த கூட்டு சிறப்பு பிரார்த்தனையில் அனைத்து ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ள வேண்டும். இந்த பகுதிகளில் வசிக்கும் 20 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, நெய், மளிகை சாமான்கள் தவ்ஹீத் ஜமாத் சார்பில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக