கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 8 ஆகஸ்ட், 2012

குற்றாலம் சாரல் விழா இன்று ஆரம்பம்: கலைநிகழ்ச்சிகள், போட்டிகளுக்கு ஏற்பாடு


குற்றாலம் சாரல் விழா இன்று (8ம் தேதி) ஆரம்பமாகி வரும் 10ம் தேதி நிறைவு பெறுகிறது. இதனையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குற்றாலம் சாரல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக 7 நாட்கள் வரை நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு வறட்சியின் காரணமாகவும், போதுமான மழை, அணைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தாலும் இந்த ஆண்டு சாரல் விழாவை 3 நாட்கள் மட்டுமே நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதுது.
இந்த விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் இன்று (8ம் தேதி) ஆரம்பமாகிறது. இன்று (8ம் தேதி) மாலை 6 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவுக்கு கலெக்டர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். தென்காசி ஆர்.டி.ஓ ராஜ கிருபாகரன் வரவேற்கிறார். சாரல் திருவிழாவை துவக்கி வைத்து அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசுகிறார். வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன் முன்னிலை வகிக்கிறார்.
இதில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, மாலை 4 மணிக்கு மாவட்ட அரசு இசை பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், 5 மணிக்கு திருநங்கை நர்த்தகி நடராஜன் குழுவினரின் தமிழ் அமுது நடன நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு லட்சுமண் சுருதி இன்னிசை கச்சேரி ஆகியவை நடக்கிறது.
நாளை (9ம் தேதி) மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவுக்கு திட்ட அலுவலர் அமானுல்லா தலைமை வகிக்கிறார். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் பத்மா பரிசுகளை வழங்குகிறார். இதில் பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இன்று (9ம் தேதி) காலை 10 மணிக்கு சிறுவர் பூங்கா நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி, 11 மணிக்கு சுற்றுலா வளர்ச்சி கழக படகு குழாமில் படகு போட்டியும் நடக்கிறது.
மாலை 4 மணிக்கு ஆய்குடி அமர்சேவா சங்க மாற்று திறனாளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், 5 மணிக்கு கே.ஆர்.ஸ்ரீ ஜெயம் கலைக் குழுவின் திரைப்பட நடன நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு குண்டு கல்யாணம் பல்சுவை நிகழ்ச்சி, 8 மணிக்கு அனுஷா, சௌமியா குழுவினரின் பரத நாட்டியம், இரவு 9 மணிக்கு சென்னை யமுனா ஸ்டேஜ் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது.
நிறைவு விழா:
<>வரும் 10ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவக்கு டி.ஆர்.ஓ உமா மகேஸ்வரி தலைமை வகிக்கிறார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் கோகுல இந்திரா சிறப்புரை ஆற்றுகிறார்.
இதில் அமைச்சர் செந்தூர் பாண்டியன், சுற்றுலா துறை முதன்மை செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா, சுற்றுலா ஆணையர் ஹேமந்த் குமார் சின்கா, வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் பேசுகின்றனர்.
கலைநிகழ்ச்சிகள்:
<>முன்னதாக, குற்றாலம் கலைவாணர் அரங்கில் அன்று மாலை 3 மணிக்கு செஸ் போட்டி, 4 மணிக்கு கயிறு இழுக்கும் போட்டி, 5 மணிக்கு கோலப் போட்டியும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஆர்.எஸ்.கே துரை குழுவினரின் பட்டி மன்றம், இரவு 7 மணிக்கு பூங்காவனம் நந்தினி குழுவினரின் கலைநிகழ்ச்சி 8 மணிக்கு சென்னை கணபதி தியேட்டர்ஸ் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி, 9 மணிக்கு சேராஸ் கலைக் குழு சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
குற்றாலம் சாரல் திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசு சாதனை விளக்க போட்டோ கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக