கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 26 மே, 2012

கடையநல்லூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

கடையநல்லூரில் நாளை (27ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கடையநல்லூர் யூனியன் அலுவலக வளாகத்தில் நாளை (27ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் எல்.ஐ.சி.,ஏஜன்ட் தேர்வு நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி.,படித்த ஆண், பெண் இருபாலரும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் போட்டோக்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் வர வேண்டும். ஓய்வூதியதாரர்கள், விதவைகள், வேலை இல்லாத பட்டதாரிகள், இல்லதரசிகள் பயன்பெறலாம். இத்தகவலை எல்.ஐ.சி.,வளர்ச்சி அதிகாரி கிரிவாசன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக