தமிழகம் முழுவதும் வட்டார வள மையங்களில் பணியாற்றி வரும் 503 ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து பள்ளிக் கல்வி இணை இயக்ககம் (பணியாளர் தொகுதி) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், வட்டார வள மையங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து கல்வித் துறை ஆண்டுதோறும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டிலும் (2012-13) 503 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வருமாறு: தமிழ்- 4, ஆங்கிலம் - 65, வரலாறு - 4, தாவரவியல் - 30, விலங்கியல் - 30, வேதியியல் -85, இயற்பியல் - 85, கணிதம் - 200 பேர்.
இவர்களின் பெயர்ப் பட்டியல் அனைத்து வட்டார வள மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக