கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 22 மே, 2012

ப்ளஸ் டூ தேர்வில் 86.7% பேர் தேர்ச்சி - மாணவியரே வழக்கம் போல அதிகம்!

1வது இடமும் நாமக்கல்லுக்கே
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியது. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா 1189 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2வது இடமும் நாமக்கல்லுக்கே

அதே நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

3வது இடமும் நாமக்கல்லுக்கே

அதேபோல மூன்றாவது இடத்தையும் நாமக்கல் மாணவர்களை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த மாவ்டடத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, பிரபாசங்கரி ஆகியோர் 1187 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் மாணவர்களேப் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.22 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3.53 லட்சம் பேர் மாணவர்கள். 4.07 லட்சம் பேர் மாணவிகள். 61,319 பேர் தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக