கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 19 மே, 2012

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 411 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 411 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக காலி இடங்களின் விவரம் வருமாறு:
அமைப்பாளர்கள் பணியிடம்: ஆலங்குளம், தென்காசி - தலா 6, அம்பை, கடையநல்லூர்  - தலா 7, சேரன்மகாதேவி, களக்காடு, குருவிகுளம் - தலா 12, கடையம், பாப்பாக்குடி - தலா 5, கீழப்பாவூர், சங்கரன்கோவில் - தலா 9,  மானூர், மேலநீலிதநல்லூர் - தலா 11, நாங்குநேரி - 16, பாளையங்கோட்டை - 10, ராதாபுரம் - 14, செங்கோட்டை - 4, வள்ளியூர் - 18, வாசுதேவநல்லூர் - 19, நெல்லை மாநகராட்சி - 3. சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி நகராட்சிகளில் காலியிடம் இல்லை. மொத்தம் - 196 காலியிடங்கள்.
சமையல் உதவியாளர் பணியிடம்: ஆலங்குளம், வாசுதேவநல்லூர் - தலா 8, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் - தலா 14, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி - தலா 10, கடையம், குருவிகுளம் - தலா 13, களக்காடு, செங்கோட்டை, நெல்லை மாநகராட்சி - தலா 4, கடையநல்லூர் - 7, கீழப்பாவூர் - 15, மானூர் - 9, மேலநீலிதநல்லூர், ராதாபுரம், தென்காசி - தலா 12, நாங்குநேரி - 27, பாப்பாக்குடி - 6, வள்ளியூர் - 11, கடையநல்லூர், புளியங்குடி நகராட்சிகள் - தலா 1, சங்கரன்கோவில், தென¢காசி நகராட்சிகளில் காலியிடம் இல்லை. மொத்தம் - 215 காலியிடங்கள்.
அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அமைப்பாளர் பணிக்கு 21.5.20012 அன்று பொது மற்றும் எஸ்சி பிரிவினர் 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண¢டும். எஸ்டி வகுப்பினர் 8வது வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்கலாம். அனுமதிக்கப்படும் பணியிடங்களில் 25 சதவீதம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களை கொண்டு நிரப்பப்படும். 
சமையல் உதவியாளர் பணிக்கு பொது மற்றும் எஸ்சி பிரிவினர் 5ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அமைப்பாளர், சமையல் உதவியாளர் இரு பணியிடங்களுக்கும் பொது மற்றும் எஸ்சி பிரிவினர் 21 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். எஸ்டி வகுப்பினர் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
நியமன இடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே தூரம் 3 கி.மீ., சுற்றளவிற்குள் இருக்க வேண்டும்.  இந்த பணியிடங்களுக்கு வருகிற 21ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கல்வித் தகுதி சான்று, வயது சான்று, சாதி சான்று, குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் அத்தாட்சி நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், உடல் ஊனமுற்றோர் அதற்கான சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும். நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலக சத்துணவு பிரிவு, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஆணையாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக