கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 26 மே, 2012

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு

 கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடையநல்லூர் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய ஸ்ரீவத்ஸ்தவா, அகர்வால், அணுகோக்நாத், ஹரிஸ், கிருஷ்ணமூர்த்தி, நிர்மல்ஜோ ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று கடையநல்லூருக்கு தந்தனர். கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வரும் ஆண், பெண் குழந்தைகள் வார்டுகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சல் பாதித்த நோயாளிகளிடம் ஒவ்வொருவராக சென்று நோய் விபரம் குறித்து மருத்துவக் குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து கடையநல்லூர் பேட்டை மலம்பாட்டை தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருந்த உரலில் தேங்கி கிடந்த தண்ணீரை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் இருந்த பெண்களிடம் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்வது குறித்தும், கொசு மருந்து புகை முறையாக அடிக்கப்படுகிறதா என்ற விபரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து மருத்துவக் குழுவில் இடம்பெற்ற டாக்டர் நிர்மல்ஜோ கூறுகையில்:- ""மத்திய அரசு அமைத்த மருத்துவ குழுவினர் கடையநல்லூர் மற்றும் மாவட்டத்திலுள்ள கிராமங்களுக்கு குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான அறிக்கை வரும் 28ம் தேதி மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்'' என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக