கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 9 மே, 2012

கடையநல்லூரில் மாணவியை செல்போனில் படம் பிடித்தவரை தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்


கடையநல்லூர்  அருகே உள்ள வடகரை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம்(42). இவரது மகள் மைதீன் நிஷா (19). இவர் தென்காசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி மைதீன்நிஷா கல்லூரிக்கு சென்று விட்டு வடகரை செல்வதற்காக கடையநல்லூர் மருத்துவ மனை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கடையநல்லூர் இக்பால்நகர் வடக்கு தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில்(47) என்பவர் தனது செல்போனில் மைதீன் நிஷாவை படம் பிடித்துள்ளார். இதைக்கண்ட மைதீன்நிஷா அவரை திட்டினார். ஆனால், முகமது இஸ்மாயில் தான் அழைக்கும் இடத்துக்கு வராவிட்டால் படத்தை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மைதீன்நிஷாவை மிரட்டினார். இதுகுறித்து மைதீன் நிஷா தனது தந்தை இப்ராகி முக்கு தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து இப்ராகிம், இஸ்மாயில் வீட்டுக்கு சென்று அவரிடம் தனது மகளை செல்போனில் படம் பிடித்து எப்படி மிரட்டலாம் எனக் கேட்டுள்ளார். அப் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இப்ராகிம் தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் இப்ராகிமும் தன்னை தாக்கியுள்ளதாக முகமது இஸ்மாயிலும் போலீசில் புகார் செய்துள்ளார். இரு தரப்பு புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக