கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 15 மே, 2012

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 17

நெல்லையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் காய்ச்சல் அறிகுறியுடன் சேர்க்கப்பட்டனர். கடந்த 4ம்தேதி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த புது அப்பனேரி மேலத்தெருவை சேர்ந்த குட்டி மகள் அஸ்வேதா(11) பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். நேற்று அவள் இறந்தாள்.
ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, ""அஸ்வேதாவிற்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் பரிசோதனை அறிக்கை விரைவில் வரவுள்ளது'' என்றார். நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது நெல்லை மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக