கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (24ம் தேதி) முதல் வழங்கப்படுகின்றது.
கடையநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்காலிகமாக கல்லூரி குமந்தாபுரம் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுவதற்கு இரண்டு பிளாக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரிக்கு நிரந்தரமாக கட்டடம் கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் செந்தூர்பாண்டியன், மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இதனிடையில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடையநல்லூரில் துவங்கப்படவுள்ள அரசு மற்றும் கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையை விரைவுபடுத்தும் வகையில் இன்று (24ம் தேதி) முதல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கிட பல்கலைக்கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கூறியிருப்பதாவது:-
""கடையநல்லூரில் நடப்பு கல்வியாண்டு முதல் அமையவுள்ள அரசு மற்றும் கலை கல்லூரியில் பயில விரும்பும் மாணவ, மாணவியருக்கான சேர்க்கை விண்ணப்பம் இன்று (24ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. இந்த கல்லூரியில் பி.பி.ஏ., பி.ஏ.(ஆங்கிலம்), பி.எஸ்சி.(கணிதம்), பி.எஸ்சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) ஆகிய பாடப்பிரிவுகளில் பயில்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக