கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 24 மே, 2012

கடையநல்லூர் அருகே முதியவர் அடித்துக் கொலை


கடையநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக கம்பால் அடித்து முதியவர் கொலை செய்யப்பட்டார்.

கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட சிங்கிலிபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் சக்கையா (70). இவருக்கும், கீழப்புதூர் கோட்டூர்சாமி மகன் முத்துப்பாண்டி (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சக்கையாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் சக்கையா நேற்று ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த முத்துப்பாண்டிக்கும் அவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் முத்துப்பாண்டி சக்கையாவை கம்பால் அடித்து தாக்கியதில் இறந்து போனார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக