கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 6 மே, 2012

கடையநல்லூரில் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு முதல் செயல்பட தீவிர நடவடிக்கை

கடையநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிங் யுனிவர்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்தாண்டு செயல்பட இருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.இதுகுறித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் மேலும் கூறியதாவது:கடையநல்லூர் தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட இருப்பதால் தற்காலிகமாக கல்லூரி இயங்குவதற்கான இடங்களை நெல்லை பல்கலை., பதிவாளர் மாணிக்கம், கண்காணிப்பாளர் கலாதேவி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.நடப்பு கல்வியாண்டில் தற்காலிகமாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் கல்லூரி துவங்குவதற்காக நெல்லை பல்கலை., சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்கட்டமாக கல்லூரியில் தளவாட சாமான்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய பல்கலை., கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.புதிய கல்லூரிக்கான நிரந்தர கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி இன்னும் சில தினங்களில் தேர்வு செய்யப்பட்டு, அது தொடர்பான தகவல் பல்கலை., மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக