கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 29 மே, 2012

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் 4.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை ஆந்திர உயர் நீதிமன்றம் நிராகரித்தது

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று 2011-ம் ஆண்டில் வழிகாட்டு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பிற்படுத்துப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர். கிருஷ்ணய்யா வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி மதன் பி லோகுர், நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கிருஷ்ணய்யா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராமகிருஷ்ண ரெட்டி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே நடைபெற்றிருக்கும் மாணவர் சேர்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாதிடப்பட்டது.

விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மதத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வேறு எந்த தெளிவான அம்சமும் பரிசீலிக்கப்படவில்லை. இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாக மத்திய அரசு கையாண்டிருக்கிறது. மதச் சிறுபான்மையினர் அனைவரும் ஒரேவகையான இனக்குழுக்கள் என்பதாகவோ, அவர்கள் சிறப்புச் சலுகை தேவைப்படும் அளவுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதாகவோ நிரூபிக்கும் எந்தவிதமான ஆதாரத்தையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஒரேதன்மை கொண்ட இனக்குழுக்களாக இயங்கவில்லை. அவர்கள் பலவகையான குழுக்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

சனி, 26 மே, 2012

கடையநல்லூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

கடையநல்லூரில் நாளை (27ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கடையநல்லூர் யூனியன் அலுவலக வளாகத்தில் நாளை (27ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் எல்.ஐ.சி.,ஏஜன்ட் தேர்வு நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி.,படித்த ஆண், பெண் இருபாலரும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் போட்டோக்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் வர வேண்டும். ஓய்வூதியதாரர்கள், விதவைகள், வேலை இல்லாத பட்டதாரிகள், இல்லதரசிகள் பயன்பெறலாம். இத்தகவலை எல்.ஐ.சி.,வளர்ச்சி அதிகாரி கிரிவாசன் தெரிவித்தார்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதார பணிக்காக 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு


கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதார பணிக்காக 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நகராட்சி நிர்வாக ஆணையர் சந்த்ரகாந்த் பி.காம்லே தெரிவித்தார்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை அடுத்து அதனை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு செய்ய கடையநல்லூர் வந்தார். நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி தலைவி ஷைபுநிஷா, ஆர்.டி.எம்.ஏ.மோகன், நகராட்சி கமிஷனர் தங்கராஜ் மற்றும் குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள், நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிர்வாக ஆணையரிடம் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், முத்தையாபாண்டி, திவான்ஒலி, பஹாப், முத்துப்பாண்டி, கணபதிதேவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி பகுதியில் காணப்படும் சுகாதாரகேடு குறித்து தெரிவித்தனர். கவுன்சிலர் முத்தையாபாண்டி நிர்வாக ஆணையரிடம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள வாட்டர் டேங்குகள் சுத்தம் செய்யப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டதாகவும், இதனால் குடிநீர் மாசு கலந்து வருவதாகவும் தெரிவித்தார். இதனை கேட்ட நகராட்சி நிர்வாக ஆணையர் வாட்டர் டேங்குகள் சுத்தம் செய்வது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி பூஸ்டரில் அமைந்துள்ள 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தாமிரபரணி கூட்டுக் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள வாட்டர் டேங்கில் ஏறி டேங்க் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக ஆணையர் சந்த்ரகாந்த் பி.காம்லே நிருபர்களிடம் கூறியதாவது:- கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவலாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொண்ட பணிகள் திருப்திகரமாக அமைந்துள்ள நிலையில் மீண்டும் அதற்கான முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கொசுக்களை ஒழித்திடவும், வாட்டர் டேங்குகளை சுத்தம் செய்யவும், குடிநீர் வால்வுகளை தீவிரமாக கண்காணிக்கவும், வீடுகளில் கொசு மருந்து தெளித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினக்கூலி அடிப்படையில் 69 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை பொதுமக்கள் ஒத்துழைப்புதான் மிகவும் முக்கியமானதாகும். கடையநல்லூர் நகராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்படி மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுகாதார பணிக்கு மட்டும் 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடையநல்லூரில் அமைந்துள்ள நகர்நல மையத்திற்கு டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு

 கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடையநல்லூர் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய ஸ்ரீவத்ஸ்தவா, அகர்வால், அணுகோக்நாத், ஹரிஸ், கிருஷ்ணமூர்த்தி, நிர்மல்ஜோ ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று கடையநல்லூருக்கு தந்தனர். கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வரும் ஆண், பெண் குழந்தைகள் வார்டுகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சல் பாதித்த நோயாளிகளிடம் ஒவ்வொருவராக சென்று நோய் விபரம் குறித்து மருத்துவக் குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து கடையநல்லூர் பேட்டை மலம்பாட்டை தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருந்த உரலில் தேங்கி கிடந்த தண்ணீரை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் இருந்த பெண்களிடம் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்வது குறித்தும், கொசு மருந்து புகை முறையாக அடிக்கப்படுகிறதா என்ற விபரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து மருத்துவக் குழுவில் இடம்பெற்ற டாக்டர் நிர்மல்ஜோ கூறுகையில்:- ""மத்திய அரசு அமைத்த மருத்துவ குழுவினர் கடையநல்லூர் மற்றும் மாவட்டத்திலுள்ள கிராமங்களுக்கு குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான அறிக்கை வரும் 28ம் தேதி மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்'' என தெரிவித்தார்.

வியாழன், 24 மே, 2012

கடையநல்லூர் அருகே முதியவர் அடித்துக் கொலை


கடையநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக கம்பால் அடித்து முதியவர் கொலை செய்யப்பட்டார்.

கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட சிங்கிலிபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் சக்கையா (70). இவருக்கும், கீழப்புதூர் கோட்டூர்சாமி மகன் முத்துப்பாண்டி (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சக்கையாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் சக்கையா நேற்று ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த முத்துப்பாண்டிக்கும் அவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் முத்துப்பாண்டி சக்கையாவை கம்பால் அடித்து தாக்கியதில் இறந்து போனார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.

கடையநல்லூர் நகராட்சி கூட்டம் : சுகாதார பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெறும்

கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவி சைபுநிஷா தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத் தலைவர் ராசையா, இளநிலை பொறியாளர் அகமதுஅலி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடைநல்லூர் நகராட்சி பகுதியில் காணப்படும் சுகாதார சீர்கேடு குறித்து கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், கணபதி, முத்தையாபாண்டி மற்றும் கவுன்சிலர்கள் சிலர் புகார் எழுப்பினர். காய்ச்சல் பணிகளில் பணியாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவார காலத்தில் விடுபட்ட சுகாதார பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெறும் என சுகாதார அலுவலர் தெரிவித்தார்.

கடையநல்லூர் அரசு கல்லூரியில் நடப்பு ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (24ம் தேதி) முதல் வழங்கப்படுகின்றது.


கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (24ம் தேதி) முதல் வழங்கப்படுகின்றது.

கடையநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்காலிகமாக கல்லூரி குமந்தாபுரம் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுவதற்கு இரண்டு பிளாக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரிக்கு நிரந்தரமாக கட்டடம் கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் செந்தூர்பாண்டியன், மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

இதனிடையில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடையநல்லூரில் துவங்கப்படவுள்ள அரசு மற்றும் கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையை விரைவுபடுத்தும் வகையில் இன்று (24ம் தேதி) முதல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கிட பல்கலைக்கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கூறியிருப்பதாவது:-

""கடையநல்லூரில் நடப்பு கல்வியாண்டு முதல் அமையவுள்ள அரசு மற்றும் கலை கல்லூரியில் பயில விரும்பும் மாணவ, மாணவியருக்கான சேர்க்கை விண்ணப்பம் இன்று (24ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. இந்த கல்லூரியில் பி.பி.ஏ., பி.ஏ.(ஆங்கிலம்), பி.எஸ்சி.(கணிதம்), பி.எஸ்சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) ஆகிய பாடப்பிரிவுகளில் பயில்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.

கடையநல்லூர் பேட்டை முஸ்லிம் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி


கடையநல்லூர் பேட்டை முஸ்லிம் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி


கடையநல்லூர் பேட்டை முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவன் செய்யது காமித் 1074 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளி நிர்வாகி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஜமாத்தார்கள் செய்யது காமித்தை பாராட்டினார்கள்.

செவ்வாய், 22 மே, 2012

பெரிய தெருவை சார்ந்த பட்டத்து சாஹிப் பாசித் சாஹிபு அவர்கள் இன்று வபாத் ஆகிவிட்டார்கள்

வபாத் அறிவிப்பு

கடையநல்லூர்  பெரிய தெருவை சார்ந்த பட்டத்து சாஹிப் OMS பாசித் சாஹிபு அவர்கள் இன்று வபாத் ஆகிவிட்டார்கள்… (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்) இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

கடையநல்லூரில் உள்ள பள்ளிகளின் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளின் மதிப்பெண் விபரம்


N.M.ரசீனா பானு மதிப்பெண்கள் - 1168 முதலிடத்தைப் பிடித்து சாதனை

ஹிதாயத்துல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி மாணவி 

N.M.ரசீனா பானு மதிப்பெண்கள் - 1168

கடையநல்லூரில் உள்ள பள்ளிகளின் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளின் மதிப்பெண் விபரம்.

ஹிதாயத்துல் இஸ்லாம்  மேல் நிலைப்பள்ளி :
மொத்த சதவிகிதம் 95%
1) N.M.
ரசீனா பானு,        மதிப்பெண்கள் -1168
2  N.ராமசுப்ரமணியன்,    மதிப்பெண்கள் -1137
3  P.கண்ணகி ராஜ் ,               மதிப்பெண்கள் -1135

மசூது தைக்கா மேல் நிலைப்பள்ளி: 
மொத்த சதவிகிதம் 97%
1
 S.A.உஸ்மான் ஹாரூன், மதிப்பெண்கள் -1151
2  நசீமா பானு,            மதிப்பெண்கள் -1133
3  M.ஆயிஷா பர்ஹானா   மதிப்பெண்கள்   - 1121

தாருஸ்ஸலாம்  மேல் நிலைப்பள்ளி :
மொத்த சதவிகிதம் 97% 
1
   M.S.ஷமீமா,                       மதிப்பெண்கள் -1117
2    B.முகமது அஸ்லாம்,   மதிப்பெண்கள் -1108
3    M.இம்ரான் கான்                 மதிப்பெண்கள் -1098

ப்ளஸ் டூ தேர்வில் 86.7% பேர் தேர்ச்சி - மாணவியரே வழக்கம் போல அதிகம்!

1வது இடமும் நாமக்கல்லுக்கே
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியது. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா 1189 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2வது இடமும் நாமக்கல்லுக்கே

அதே நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

3வது இடமும் நாமக்கல்லுக்கே

அதேபோல மூன்றாவது இடத்தையும் நாமக்கல் மாணவர்களை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த மாவ்டடத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, பிரபாசங்கரி ஆகியோர் 1187 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் மாணவர்களேப் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.22 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3.53 லட்சம் பேர் மாணவர்கள். 4.07 லட்சம் பேர் மாணவிகள். 61,319 பேர் தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதினர்.

திங்கள், 21 மே, 2012

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது முக்கிய இணையதள முகவரிகள்

பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர் மாணவிகள். பள்ளி மாணவ-மாணவிகளை தவிர 61,319 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதினார்கள். 

தேர்வு மார்ச் மாதம் 30-ந் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்கள் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த பணியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மதிப்பீட்டு பணி ஏப்ரல் 30-ந் தேதி முடிவடைந்தது. பின்னர் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. 

இந்த ஆண்டு முதல் முதலாக மாணவ-மாணவிகளுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவு மே 22-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். தேர்வு முடிவு அரசு மற்றும் தனியார் இணையதளங்களில் தெரிந்துகொள்ள அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. முக்கிய இணையதள முகவரிகள் வருமாறு:- 

http://tnresults.nic.in/
http://www.tamilmurasu.org/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.dge3.tn.nic.in/
http://www.maalaimalar.com/
http://www.schools9.com/
http://results.nic.in/result2announced.aspx
http://www.dinakaran.com
http://kalvimalar.dinamalar.com/results.asp

எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்
(plus < space> < reg No >  to  58585 )
+2 தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்து கொள்ள, உங்களது செல்போனில் plusஎன டைப் செய்து < space> உங்களது தேர்வு எண் டைப் செய்து 58585 என்று நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.

உதாரணமாக : plus 202312

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய், அமைச்சர் செந்தூர் பாண்டியன், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட உயர் அதிகாரிகள், மருத்துவ குழுக்கள் ஆகியோர் கடையநல்லூருக்கு வருகை தந்து தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதனிடையில் கடந்த மூன்று தினங்களாக டெங்கு காய்ச்சலின் வேகம் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. காய்ச்சல் பாதித்து கடையநல்லூர் ரைஸ்மில் தெற்கு தெருவை சேர்ந்த காபிஷா (2) குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபிஷாவின் தாயார் நிஷாத்தின் தாயாருக்கு தென்காசியில் உடல் நிலை சரியில்லை என கூறப்பட்ட நிலையில் பாட்டியை பார்ப்பதற்காக நிஷாத்துடன் காபிஷாவும் சென்றதாக கூறப்படுகிறது.


பாட்டியை பார்த்து விட்டு கடையநல்லூர் வந்த காபிஷா உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையில் காய்ச்சல் பாதித்த காபிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் கடையநல்லூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபிஷாவின் தந்தை செய்யது மசூது துபாயில் டிரைவராக வேலை பார்த்து வருகிறாராம்.


இதனிடையில் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காய்ச்சல் பாதித்த 25 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் வார்டில் மட்டும் 14 பேரும், ஆண்கள் வார்டில் 6 பேரும், பெண்கள் வார்டில் 5 பேரும் காய்ச்சலுக்கான சிகிச்சை மேற்கொண்டனர். ஏற்கனவே 10 மாத குழந்தை தஸ்லிம், 5வயது சிறுவன் சந்தரு பலியாகிவிட்ட நிலையில் தற்போது காபிஷாவும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகிவிட்டதால் கடையநல்லூரில் பொதுமக்கள் பெரிதும் கவலையும், ஆதங்கமும் அடைந்துள்ளனர்.

கடையநல்லூரில் 23ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு குடிநீர் "கட்'


கடையநல்லூரில் குடிநீர் அபிவிருத்தி பணிகளுக்காக வரும் 23ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு குடிநீர் "கட்' செய்யப்படுகிறது.

இதுகுறித்து கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) தங்கராஜ் கூறியிருப்பதாவது:-

கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அபிவிருத்தி திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியின் கீழ் கருப்பாநதி, பெரியாற்றுப்படுகையில் முக்கிய பணிகள் வரும் 23ம் தேதி முதல் துவங்கப்பட இருப்பதால் சுமார் ஒருவார காலத்திற்கு குடிநீர் வினியோகம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருவார காலத்திற்கு தேவையான குடிநீரை சேமித்து வைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நண்பர் ஜியாவுர் ரஹ்மான் அன்வாரி திருமணத்தின் சில புகைப்படங்கள்


21/05/2012 
நண்பர் ஜியாவுர் ரஹ்மான் அன்வாரி திருமணத்தின் சில புகைப்படங்கள்






நண்பர்  ஜியாவுர் ரஹ்மான் அன்வாரி ன் திருமண நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!

பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!

பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.

ஜூன் மாதம் கோச்சடையான் இசை வெளியீடு


இந்த ஆண்டில் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் இசை ஆல்பங்களுள் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான்தான்.



இந்தப் படத்துக்காக ஏ ஆர் ரஹ்மான் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் தந்துள்ளார். 

படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. வரும் ஜூன் மாதம் கோச்சடையான் இசையை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

படமே செப்டம்பரில் வெளியாகிவிடும் என தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறியுள்ள நிலையில், ஜூன் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் கோச்சடையான் இசை வெளியாகவிருக்கிறது.

சோனி நிறுவனம் கோச்சடையான் இசையை வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழில் 3 டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் கோச்சடையான் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.

சனி, 19 மே, 2012

கடையநல்லூரில் மே 19 இன்று சாலை மறியல் படங்களுடன்


கடையநல்லூரில் மே 19 இன்று சாலை மறியல் படங்களுடன்

கடையநல்லூரில் பொதுப்பணித்துறை/நீர்வள ஆதார அமைப்பு போஸ்டரால் பரபரப்பு 
பாப்பன்கால்வாய் அக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க முயன்றதால் பொது மக்கள் சாலை மரியல் நடத்தி இடிக்க விடாமல் போராட்டம் நடத்தினர்


மறியல் நடந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.youtube.com/watch?v=zddhCblYED0&feature=youtu.be





கடையநல்லூரில் மே 19 இன்று சாலை மறியல் படங்களுடன்

கடையநல்லூரில் மே 19 இன்று சாலை மறியல் படங்களுடன்

கடையநல்லூரில் பொதுப்பணித்துறை/நீர்வள ஆதார அமைப்பு போஸ்டரால் பரபரப்பு 
பாப்பன்கால்வாய் அக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க முயன்றதால் பொது மக்கள் சாலை மரியல் நடத்தி இடிக்க விடாமல் போராட்டம் நடத்தினர்


மறியல் நடந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.youtube.com/watch?v=zddhCblYED0&feature=youtu.be





நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 411 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 411 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக காலி இடங்களின் விவரம் வருமாறு:
அமைப்பாளர்கள் பணியிடம்: ஆலங்குளம், தென்காசி - தலா 6, அம்பை, கடையநல்லூர்  - தலா 7, சேரன்மகாதேவி, களக்காடு, குருவிகுளம் - தலா 12, கடையம், பாப்பாக்குடி - தலா 5, கீழப்பாவூர், சங்கரன்கோவில் - தலா 9,  மானூர், மேலநீலிதநல்லூர் - தலா 11, நாங்குநேரி - 16, பாளையங்கோட்டை - 10, ராதாபுரம் - 14, செங்கோட்டை - 4, வள்ளியூர் - 18, வாசுதேவநல்லூர் - 19, நெல்லை மாநகராட்சி - 3. சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி நகராட்சிகளில் காலியிடம் இல்லை. மொத்தம் - 196 காலியிடங்கள்.
சமையல் உதவியாளர் பணியிடம்: ஆலங்குளம், வாசுதேவநல்லூர் - தலா 8, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் - தலா 14, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி - தலா 10, கடையம், குருவிகுளம் - தலா 13, களக்காடு, செங்கோட்டை, நெல்லை மாநகராட்சி - தலா 4, கடையநல்லூர் - 7, கீழப்பாவூர் - 15, மானூர் - 9, மேலநீலிதநல்லூர், ராதாபுரம், தென்காசி - தலா 12, நாங்குநேரி - 27, பாப்பாக்குடி - 6, வள்ளியூர் - 11, கடையநல்லூர், புளியங்குடி நகராட்சிகள் - தலா 1, சங்கரன்கோவில், தென¢காசி நகராட்சிகளில் காலியிடம் இல்லை. மொத்தம் - 215 காலியிடங்கள்.
அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அமைப்பாளர் பணிக்கு 21.5.20012 அன்று பொது மற்றும் எஸ்சி பிரிவினர் 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண¢டும். எஸ்டி வகுப்பினர் 8வது வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்கலாம். அனுமதிக்கப்படும் பணியிடங்களில் 25 சதவீதம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களை கொண்டு நிரப்பப்படும். 
சமையல் உதவியாளர் பணிக்கு பொது மற்றும் எஸ்சி பிரிவினர் 5ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அமைப்பாளர், சமையல் உதவியாளர் இரு பணியிடங்களுக்கும் பொது மற்றும் எஸ்சி பிரிவினர் 21 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். எஸ்டி வகுப்பினர் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
நியமன இடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே தூரம் 3 கி.மீ., சுற்றளவிற்குள் இருக்க வேண்டும்.  இந்த பணியிடங்களுக்கு வருகிற 21ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கல்வித் தகுதி சான்று, வயது சான்று, சாதி சான்று, குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் அத்தாட்சி நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், உடல் ஊனமுற்றோர் அதற்கான சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும். நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலக சத்துணவு பிரிவு, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஆணையாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 503 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல்

தமிழகம் முழுவதும் வட்டார வள மையங்களில் பணியாற்றி வரும் 503 ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து பள்ளிக் கல்வி இணை இயக்ககம் (பணியாளர் தொகுதி) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், வட்டார வள மையங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து கல்வித் துறை ஆண்டுதோறும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டிலும் (2012-13) 503 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வருமாறு: தமிழ்- 4, ஆங்கிலம் - 65, வரலாறு - 4, தாவரவியல் - 30, விலங்கியல் - 30, வேதியியல் -85, இயற்பியல் - 85, கணிதம் - 200 பேர்.
 இவர்களின் பெயர்ப் பட்டியல் அனைத்து வட்டார வள மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 15 மே, 2012

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 17

நெல்லையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் காய்ச்சல் அறிகுறியுடன் சேர்க்கப்பட்டனர். கடந்த 4ம்தேதி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த புது அப்பனேரி மேலத்தெருவை சேர்ந்த குட்டி மகள் அஸ்வேதா(11) பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். நேற்று அவள் இறந்தாள்.
ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, ""அஸ்வேதாவிற்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் பரிசோதனை அறிக்கை விரைவில் வரவுள்ளது'' என்றார். நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது நெல்லை மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி தேர்வு முடிவுகள்


மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு : 6101-6108, 6201-6233, 6301-6332.
7ம் வகுப்பு : 7101-7148.
8ம் வகுப்பு : 8101-8136.
9ம் வகுப்பு : 9101, 9103, 9105, 9107-9115, 9117-9120, 9122, 9124-9132, 9134-9140, 9201, 9203-9209, 9211-9215, 9218, 9221-9231, 9233-9237.

மேலசெங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு :
>அ : 6101-6131.
ஆ : 6201-6232.
இ : 6301-6331.

7ம் வகுப்பு :
>அ : 7101-7160.
ஆ : 7201-7259.

8ம் வகுப்பு :
>அ : 8101-8149.
ஆ : 8201-8249.

9ம் வகுப்பு :
>9001-9015, 9017-9036, 9038-9043, 9045-9062, 9064-9067, 9069-9070, 9072-9121.

சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு :
>அ : 1-19, 23-44.
ஆ : 2-25, 27-40, 42, 43.

7ம் வகுப்பு : 1-36, 38-79.
8ம் வகுப்பு : 1-34, 36-76.

9ம் வகுப்பு :
>அ : 2-8, 10-58.
ஆ : 1, 3-59.

திருமலையப்பபுரம் கைலாசம் நினைவு உயர்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு :
>அ : 6101-6135.
ஆ : 6201-6235.
இ : 6301-6335.
ஈ : 6401-6422.

7ம் வகுப்பு :
>அ : 7101-7138.
ஆ : 7201-7238.
இ : 7301-7336
ஈ : 7401-7439.

8ம் வகுப்பு :
>அ : 8101-8106, 8108-8113, 8115-8121, 8122-8144.
ஆ : 8201-8223, 8225-8245, 8247, 8249.
இ : 8301-8322, 8324, 8325, 8328-8349.

9ம் வகுப்பு :
>அ : 9101-9104, 9106-9115, 9117-9133, 9135-9170, 9172, 9173, 9175-9177.

ஆ : 9201, 9204-9208, 9210, 9212, 9213, 9216, 9217, 9219, 9221-9228, 9230-9238, 9240-9244, 9246, 9248, 9249, 9251, 9254, 9255, 9257-9264, 9266, 9268, 9269, 9271-9273.

சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு :
>அ : 6101-6174
ஆ : 6201-6275
இ : 6301-6377

7ம் வகுப்பு :
>அ : 7101-7173
ஆ : 7201-7272
இ : 7301-7372
ஈ : 7401-7471

8ம் வகுப்பு :
>அ : 8101-8187
ஆ : 8201-8288
இ : 8301-8388

9ம் வகுப்பு :
>அ : 9101-9112, 9114-9125, 9127, 9128, 9130-9135, 9137-9155.
ஆ : 9201-9254.
இ : 9301-9336, 9338-9353, 9355, 9356.
ஈ : 9401-9404, 9406-9411, 9414, 9416, 9417, 9419, 9422-9437, 9439-9443, 9445-9465, 9467, 9470, 9472-9479.

உ : 9501-9502, 9504, 9505, 9507, 9511, 9513, 9515, 9516, 9519, 9522, 9525-9530, 9532, 9534, 9535, 9538, 9541, 9545, 9546, 9548.

ஊர்மேலழகியான் அரசு மேல்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு : 601-621, 623-635, 637.
7ம் வகுப்பு : 701-737, 739-746
8ம் வகுப்பு : 801-832.
9ம் வகுப்பு : 901-925, 927, 929-933, 935.