கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 28 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை

கடையநல்லூரில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், டெங்கு காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் மூலம் ரத்த தடவல்கள், ரத்த மாதிரிகள் ஆய்விற்காக எடுக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொசுப்புழுக்கொல்லி மருந்து வீடு தோறும் உள்ள தண்ணீர் தொட்டி, பாத்திரத்தில் ஊற்றப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. 
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள், சுற்றியுள்ள வீடுகளில் கை புகைபோக்கி இயந்திரங்கள் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகிறன.  
ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் வாறுகால்கள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குளோரின் கலந்து குடிநீர் நகராட்சி பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. 

எனவே டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். டெங்கு காய்ச்சல் பரவ காரண மான கொசுக்களை ஒழிக்க ஒத்துழைப்பு நல்க வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக