கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கடையநல்லூர் நகராட்சியில் ரூ. 21.41 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

கடையநல்லூர் நகராட்சியில் ரூ. 21.41 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய குடிநீர்த் திட்டம் செப்டம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என நகர்மன்றத் தலைவர் சைபுன்னிஷா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடையநல்லூரில் 13,332 குடிநீர் இணைப்புக்கள் உள்ளன. மேலும் சில ஆயிரம் குடிநீர் இணைப்புக்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த திமுக ஆட்சியில் ரூ.21.41 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது.
இத் திட்டத்தின் மூலம் 2040-ம் ஆண்டின் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் நாளொன்றுக்கு தேவைப்படும் சுமார் ஒரு கோடியே 41 லட்சம் லிட்டர்குடிநீரை வழங்க முடியும். இதற்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணியும்,பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.
இத் திட்டத்தின் கீழ் 7 இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டு அதில் 6 இடங்களில் தொட்டிகள் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆனால், கிருஷ்ணாபுரம் ஜவாஹர் தெருவில் மேல்நிலைத் தொட்டி அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து,குடிநீர்த் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தைநடத்தப்பட்டதையடுத்து மாற்று இடத்தில் 7-வது தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே செப்டம்பரில் இத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும். பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்
நகர்மன்றத் தலைவர்  சைபுன்னிஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக