கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வாசு தரணி சர்க்கரை ஆலை அருகே கார் மீது லாரி மோதல்: டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் பலி



நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பாலசந்திர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குசேலன் (வயது33). இவர் வாசுதேவநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார்.
குசேலன் தனது காரில் இன்று காலை மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவரது கார் தரணி சர்க்கரை ஆலை அருகே காலை 6.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவரது கார் மீது குஜராத் மாநிலத்தில் இருந்து ஆலங்குளத்திற்கு பஞ்சுலோடு ஏற்றி சென்ற லாரி மோதியது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி நொறுங்கியது. பலத்த காயமடைந்த குலேசன் இடிபாடுகளில் சிக்கி கொண்டார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியபடி கிடந்த குசேலனை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஊஞ்சல்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் பலியான குசேலனுக்கு சித்ரா என்ற மனைவியும், மகரிஷி (3) என்ற மகனும், வைஷ்ணவி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக