கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 26 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் குடிநீர் குழாய்களில் வலை அமைக்க ஏற்பாடு

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் மற்றும் குழாய்களில் வலை அமைத்திட தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

கடையநல்லூரில் பரவி வரும் மர்மக் காய்ச்சலை அடுத்து நேற்று மாலை கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆஸ்பத்திரியில் பெண்கள் வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த காய்ச்சல் பாதித்த நோயாளிகளிடம் சிகிச்சை தொடர்பாக கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து கலெக்டரிடம் ஆஸ்பத்திரி டாக்டர் அனிதாபாலின், காய்ச்சல் பாதித்த நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த சிகிச்சைகள் குறித்து விளக்கமளித்தார்.


ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்த பெண் நோயாளிகளை நெல்லைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக டாக்டர் தெரிவித்ததை அடுத்து அதனை உடனடியாக மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து கடையநல்லூர் மலம்பாட்டை ரோட்டில் இருந்து ஆற்றுப்படுகையை தாண்டி செல்லக்கூடிய தார்காடு பகுதிகளில் சாலை அமைத்திட வேண்டுமென விவசாயிகள் பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கையினை அடுத்து அப்பகுதியினை கலெக்டர் பார்வையிட்டார்.



""கடையநல்லூரில் காணப்படும் காய்ச்சலுக்கு முக்கிய காரணம் கொசுக்கள் தான் என தெரியவந்துள்ளது. இந்த கொசுக்களை பொறுத்தவரை குழாய்களின் வழியாக சென்று நோயை பரப்பக்கூடும் என தெரியவந்துள்ளது. எனவே நகராட்சி பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் உள்ள குழாய்கள் மற்றும் வாட்டர் டேங்குகளில் மூடி வைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படும். தொண்டு நிறுவனங்கள் மூலமாக வீடுகளில் உள்ள குழாய்களில் மேல்மூடி அமைக்கும் வகையில் வலைகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக