கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 28 ஏப்ரல், 2012

கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் அதிமுக., கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்


கடையநல்லூரில் அரசு கல்லூரி அமைத்திட உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து வழங்கப்பட்ட தீர்மானம் அஜெண்டாவில் இடம்பெறாததையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீர்மானம் மினிட்டில் எழுதப்பட்டு அதற்கான நகல் வழங்கப்படுமென நகராட்சி தலைவர் உறுதியளித்தார்.
கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவர் சைபுன்னிசா தலைமையில் நேற்று மாலை நடந்தது. துணைத் தலைவர் ராசையா, கமிஷனர் (பொறுப்பு) ராமலிங்கம், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் நாகூர்மீரான், சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், பாஸ்கர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியவுடன் அதிமுக கவுன்சிலர்கள் வீரபாகு, முத்துப்பாண்டி, ஆறுமுகம் கருப்பையா, முத்தையாபாண்டி, மாரிமுத்து, முத்துகிருஷ்ணன் ஆகியோர் கடையநல்லூரில் அரசு சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திட உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

கவுன்சிலர் வீரபாகு பேசுகையில், ""கடையநல்லூரில் கல்லூரி அமைத்திட உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டுவர கடிதம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அஜெண்டாவில் அதற்கான பொருள் இடம்பெறவில்லை. தீர்மானத்தை நிறைவேற்றி முதலாவதாக பதிவு செய்து விட்டு பின்னர் கூட்டத்தை நடத்துங்கள்'' என்றார்.
இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி துணைத் தலைவர் ராசையா மற்றும் சில கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்களை அமைதிப்படுத்தினர். தொடர்ந்து தலைவர் தீர்மானம் நிறைவேற்றப்படுமென உறுதியளித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: 
ஆறுமுகசாமி: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் காய்ச்சல் பாதித்து சிலர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக குடிநீரில் புழுக்கள் அதிகமாக இருப்பதுதான் காய்ச்சலுக்கு முக்கிய காரணம். காய்ச்சலை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன.
சுகாதார அலுவலர் : காய்ச்சல் பரவி வருவது குறித்து சர்வே எடுக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீரபாகு : காய்ச்சல் பாதித்தோருக்கு வெள்ளை அணுக்கள் குறைவுதான் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இதற்கான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
கமிஷனர்: கடையநல்லூர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மேலக்கடையநல்லூரை சேர்ந்த சிறுவன் இறந்ததற்கு டெங்கு காய்ச்சல்தான் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியோரது ஒத்துழைப்புடன் நகராட்சி நிர்வாகம் காய்ச்சல் தொடர்பான பணிகளை கண்காணித்து அதனை தடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆறுமுகசாமி: குடிநீரில் குளோரின் கலக்கவில்லை. புழு அதிகமாக வருகிறது என தெரிவிக்கப்பட்டும் ஏன் அதற்கான நடவடிக்கை இல்லை.
கமிஷனர்: குடிநீரில் குளோரின் கலந்துதான் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்.
பியூலா: எனது வீட்டில் குடிநீர் குழாயில் வந்த தண்ணீரில் கூட புழுக்கள் இருந்தது. அதனால் நிச்சயமாக குளோரின் கலக்கப்படவில்லை என்றே கூறலாம்.
தலைவர்: உடனடியாக குடிநீரில் புழுக்கள் கலந்தது குறித்த பணிகளை ஆய்வு செய்யுங்கள்.
இதனிடையில் அதிமுக கவுன்சிலர் முத்துப்பாண்டி, வீரபாகு, முத்துகிருஷ்ணன் ஆகியோர் மினிட்டில் கல்லூரி அமைத்திட அனுமதி தந்த முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பதிவு செய்து விடுங்கள் என மீண்டும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் கட்டாயமாக தீர்மானம் நிறைவேற்றித்தரப்படும். பின்னர் அதற்கான நகல் உங்களுக்கு வழங்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் பலமாக மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் ஆதரவு தெரிவிப்பதாக கவுன்சிலர் லத்தீப் தெரிவித்தார்.

கடையநல்லூரில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை

கடையநல்லூரில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், டெங்கு காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் மூலம் ரத்த தடவல்கள், ரத்த மாதிரிகள் ஆய்விற்காக எடுக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொசுப்புழுக்கொல்லி மருந்து வீடு தோறும் உள்ள தண்ணீர் தொட்டி, பாத்திரத்தில் ஊற்றப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. 
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள், சுற்றியுள்ள வீடுகளில் கை புகைபோக்கி இயந்திரங்கள் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகிறன.  
ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் வாறுகால்கள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குளோரின் கலந்து குடிநீர் நகராட்சி பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. 

எனவே டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். டெங்கு காய்ச்சல் பரவ காரண மான கொசுக்களை ஒழிக்க ஒத்துழைப்பு நல்க வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் அருகே சாலையில் விழுந்த மரத்தினால் போக்குவரத்து பாதிப்பு

கடையநல்லூர் அருகே சாலையில் வியாழக்கிழமை விழுந்த மரத்தினால் தென்காசி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 கடையநல்லூர் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.
 இதன் காரணமாக குமந்தாபுரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த பெரிய மரம்
 சாலையில் விழுந்தது. எனவே தென்காசி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 தகவலறிந்த கடையநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர்கள் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் இடி மின்னலுடன் கனமழை

கடையநல்லூரில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கடையநல்லூர், சொக்கம்பட்டி, காசிதர்மம், இடைகால் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் பலத்த இடி, மின்னல் காணப்பட்டது. ஏற்கனவே கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வந்தபோதிலும் நேற்று பெய்த கோடை மழை சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. பலத்த இடி, மின்னல் காரணமாக கடையநல்லூர் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் மற்றும் தொலைபேசிகள் செயலிழந்தன.


மாவடிக்கால், கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலகடையநல்லூர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி.களும் பழுதாகி போயின. பலத்த மழையால் தேசிய நெடுஞ்சாலை, பஜார் ரோடு, தெருக்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடையநல்லூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நகராட்சி ஊழியர்கள் விசாரணை செய்து கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் மூலம் ரத்த தடவல்கள் மற்றும் ரத்த மாதிரிகள் ஆய்விற்காக எடுக்கப்பட்டும், நோயுற்றவர்களை கண்டறிந்து சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நகராட்சி பகுதிகளில் கொசு புழு ஒழிப்பு மற்றும் கொசு ஒழிப்பு தொடர்பான அறிவுரைகள் பூச்சியியல் வல்லுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. போதுமான அளவு கொசுப் புழு கொல்லி மருந்து நகராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 26 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் தொடரும் பரிதாபம் டெங்கு காய்ச்சலுக்கு 10 மாத குழந்தை இன்று பலி

கடையநல்லூரில் தொடரும் பரிதாபம் டெங்கு காய்ச்சலுக்கு 10 மாத குழந்தை இன்று பலி


கடையநல்லூரில் இன்று 26/04/2012 இடி மின்னலுடன் கூடிய கனமழை படங்களுடன்

26/04/2012  kadayanallur rain

கடையநல்லூரில் இன்று மதியம் 2.15 மணி முதல் மாலை 4 .30 வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது 






கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைய வாய்ப்பு

கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே அரசு கலைக்கல்லூரி அமைக்க வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.


கடையநல்லூர் தொகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மேல்நிலை கல்வி முடித்த பின், உயர்கல்வி கற்க வசதியாக கடையநல்லூரில் அரசு கல்லூரி கொண்டு வர வேண்டுமென பல ஆண்டுகளாக இத்தொகுதி மக்களும்,
சமூக நல அமைப்புகள், சுழற்கழகம், அரிமா சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.


ஆனால் அரசுக் கல்லூரி என்பது வெறும் கனவாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக இந்தப் பகுதி மாணவ, மாணவிகள் வெளியூரிலுள்ள கல்லூரிகளுக்குச் சென்று கல்லூரிப் படிப்பைத் தொடர வேண்டிய நிலை இருந்து வந்தது.


உள்ளூரில் கல்லூரி இல்லாத நிலையில் ஏராளமான மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் தங்கள் கல்லூரிக் கல்வியை மறக்க வேண்டிய நிர்பந்தமும் இருந்து வந்தது. இந்நிலையில், கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.செந்தூர்பாண்டியன், தான் வென்றால் கடையநல்லூரில் அரசுக் கல்லூரி கொண்டு வருவேன் என உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் கடையநல்லூர் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்: இதற்கிடையே, மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்,கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ள பகுதியில் அரசு கல்லூரி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில் இந்த இடத்தை கதர், கிராமத் தொழில்கள் துறை அமைச்ச ரும், தொகுதி உறுப்பினருமான பி.செந்தூர்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சருடன் தொகுதிச் செயலர் பொய்கை மாரியப்பன், நகரச் செயலர்
கிட்டுராஜா, ஒன்றியச் செயலர் முத்துப்பாண்டி, அச்சன்புதூர் பேரூராட்சித் தலைவர் சுசீகரன், மாவட்ட மாணவரணிச் செயலர் அருள்ராஜ், மாவட்ட மருத்துவரணித் தலைவர் டாக்டர் சஞ்சீவி, மாவட்டப் பிரதிநிதி பெருமையாப்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன், நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் முருகன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் மைதீன், துணைச் செயலர் சரவணன் உள்ளிட்டோர் சென்றனர்.

கடையநல்லூர் ரத்னா பள்ளி மாணவர்களுக்கு விருது

கடையநல்லூர் ரத்னா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மாரியப்பன், நாராயணன் ஆகியோருக்கு சிறந்த அறிவியல் ஆய்வுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.


 தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த அறிவியல் படைப்புக்களை உருவாக்கிய இப் பள்ளி மாணவர்கள் மாரியப்பன், நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ. 3,000 மற்றும் விருது வழங்கப்பட்டது. மாணவர்களை பள்ளி நிர்வாகி பிரகாஷ், செயலர் மாடசாமி, தலைமைஆசிரியை சக்திவடிவு உள்ளிட்டோர் பாராட்டினர்.

கடையநல்லூரில் குடிநீர் குழாய்களில் வலை அமைக்க ஏற்பாடு

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் மற்றும் குழாய்களில் வலை அமைத்திட தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

கடையநல்லூரில் பரவி வரும் மர்மக் காய்ச்சலை அடுத்து நேற்று மாலை கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆஸ்பத்திரியில் பெண்கள் வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த காய்ச்சல் பாதித்த நோயாளிகளிடம் சிகிச்சை தொடர்பாக கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து கலெக்டரிடம் ஆஸ்பத்திரி டாக்டர் அனிதாபாலின், காய்ச்சல் பாதித்த நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த சிகிச்சைகள் குறித்து விளக்கமளித்தார்.


ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்த பெண் நோயாளிகளை நெல்லைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக டாக்டர் தெரிவித்ததை அடுத்து அதனை உடனடியாக மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து கடையநல்லூர் மலம்பாட்டை ரோட்டில் இருந்து ஆற்றுப்படுகையை தாண்டி செல்லக்கூடிய தார்காடு பகுதிகளில் சாலை அமைத்திட வேண்டுமென விவசாயிகள் பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கையினை அடுத்து அப்பகுதியினை கலெக்டர் பார்வையிட்டார்.



""கடையநல்லூரில் காணப்படும் காய்ச்சலுக்கு முக்கிய காரணம் கொசுக்கள் தான் என தெரியவந்துள்ளது. இந்த கொசுக்களை பொறுத்தவரை குழாய்களின் வழியாக சென்று நோயை பரப்பக்கூடும் என தெரியவந்துள்ளது. எனவே நகராட்சி பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் உள்ள குழாய்கள் மற்றும் வாட்டர் டேங்குகளில் மூடி வைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படும். தொண்டு நிறுவனங்கள் மூலமாக வீடுகளில் உள்ள குழாய்களில் மேல்மூடி அமைக்கும் வகையில் வலைகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.

கடையநல்லூரில் விரைவில் அரசு கலைக்கல்லூரி

கடையநல்லூரில் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு முதல் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமந்தாபுரம் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தினை நேற்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் பார்வையிட்டார்.

கடையநல்லூர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுமென சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை தொடர்ந்து கடையநல்லூரில் கல்லூரி இயங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரி துவங்கிட உத்தரவிட்டிருப்பதால் தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் கல்லூரி இயங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


இதனிடையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அலுவலக கண்காணிப்பாளர் கலாதேவி, என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் சுவாமிதாஸ் ஆகியோர் நேற்று காலை கடையநல்லூரில் கலைக்கல்லூரி அமைவதற்கான பகுதிகளை பார்வையிட்டனர். மதுரை - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை குமந்தாபுரத்தில் செயல்பட்டு வரும் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகம் உட்பட 3 இடங்களை பல்கலைக்கழக அதிகாரிகள் பார்வையிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த 3 இடங்கள் பட்டியலும் பல்கலைக்கழக பதிவாளரின் பரிந்துரைக்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றில் ஒரு இடம் தேர்வு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதிலும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடப்பாண்டு முதல் செயல்பட உள்ள கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பல்கலைக் கழக அதிகாரிகளுடன் கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி சொக்கம்பட்டி பெருமையாபாண்டியன், கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் டாக்டர் ராஜா முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

கடையநல்லூரை உலுக்கும் மர்ம காய்ச்சல்-5 வயது சிறுவன் பலி

கடையநல்லூர் பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியானான்.

கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மர்ம காய்ச்சலுக்கு கடந்த வாரம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவரது மனைவி ரஹிமாள் பலியானார்.

ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு கடையநல்லூர் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு 35க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் கடந்த வாரம் ரஹிமாள் பலியானது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லேசாக தலை வலித்தாலோ, உடம்பு சுட்டாலோ மக்கள் டென்ஷன் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் ரத்தத்தில் பிளேட்லெட்ஸ் என்னும் அணுக்கள் குறைவதாக கண்டறியப்பட்டது.

அதனால் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்ஸ் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்ற வேண்டு்ம். இதற்காக மக்கள் நெல்லை, மதுரைக்கு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கடையநல்லூர் மருத்துவமனையில் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியபோதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாறாக கடையநல்லூர் மருத்துவமனையில் மருத்துவ சேவை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக மக்கள் குமுறுகின்றனர்.

8 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய மருத்துவமனையில் 3 டாக்டர்கள் தான் பணிபுரிகின்றனர். அவர்களும் சரிவர பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ஒரு பெண் பலியான நிலையில் நேற்று மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மேலக்கடையநல்லூர் பவுண்ட்த் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவரின் மகன் சந்துரு (5). கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறறும் சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை பலியானான்.

சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியானது பொதுமக்களிடையே குறிப்பாக தாய்மார்களிடையே மிகுந்த பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சாதாரண தலைவலி, காய்ச்ச்ல கூட மர்ம காய்ச்சலாக இருக்குமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

பொதுமக்களிடையே பீதியும், பதட்டமும் நிலவிய போதிலும் சுகாதாரத் துறையிடமோ, நகராட்சி நிர்வாகத்திடமோ எந்தவித சலனமும் இல்லை. அவர்கள் எப்போதும் போல அடிப்படை ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி பகுதியில் நிலவி வரும் சுகாதார சீர்கேட்டை முழுமையாக போக்கவோ, மக்களின் நலனிற்காக சிறப்பு மருத்துவ முகாம் அமைப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 3ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. அதே போல மர்ம காய்ச்சலை போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

திங்கள், 23 ஏப்ரல், 2012

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

சனி, 21 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் மர்ம காய்ச்சலை தடுக்க IUML கோரிக்கை

கடையநல்லூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜூத் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார். நூற்றுக்கணக்கானோர் நெல்லை, மதுரை போன்ற பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களிடையே பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


எனவே இந்த காய்ச்சலை கட்டுபடுத்த தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த மர்ம காய்ச்சல் பரவலை தடுக்க கடையநல்லூரில் ஒரு நிரந்தர மருத்துவக்குழு செயல்படவும் உத்தரவிட வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடையநல்லூரில் பரவி வரும் ஒருவித மர்மக் காய்ச்சல்

கடையநல்லூர் பகுதியில் பரவி வரும் ஒருவித மர்மக் காய்ச்சலால் மேலக்கடையநல்லூர், பேட்டை பகுதி, தெருப்பகுதி, முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகளைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் (30), லட்சுமி (32), சுந்தரி (16), பரமேஸ்வரி (42), பத்மாவதி (55), மாடத்தியம்மாள் (60), கருப்பசாமி (16), குமார் (30), சபாரத்தினம் (42), சக்திவேல் (10), சுதா (9), காளிமுத்து (8), கண்ணன் (8), ராஜா (6), கங்கைஅமரன் (12) உள்பட 17 பேர் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 மேலும் கடையநல்லூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனராம்.
 கடந்த 6 மாதங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோரில் சுமார் 50 பேர் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவால் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனராம். தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் ஏராளமானோர் திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 நடவடிக்கை வேண்டும்: சில ஆண்டுகளுக்கு முன்பு கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் பரவிய ஒருவித மர்மக் காய்ச்சலால் பலர் இறந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
 இதையடுத்து, அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் பல்வேறு நோய்த் தடுப்புக் குழுவினர் கடையநல்லூரில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 எனினும், மர்மக் காய்ச்சல் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காய்ச்சலின் தீவிரம் அதிகரிப்பதற்குள் மாநில சுகாதாரத் துறை கடையநல்லூருக்கு சிறப்பு மருத்துவக் குழுக்களை அனுப்பி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.



புதன், 18 ஏப்ரல், 2012

ஆறு கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை


6 கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

பாகிஸ்தானில் 6 கால்களுடன் அதிசயக் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
சுக்குரில் பிறந்த இந்த குழந்தை தற்போது கராச்சியில் உள்ள தேசிய குழந்தைகள் சுகாதார நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்வது குறித்து டாக்டர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்த குழந்தையின் தந்தை பெயர் இம்ரான் அலி ஷேக்(31). இவர் எக்ஸ்ரே டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அப்ஷான் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த குழந்தை இவர்களின் முதல் குழந்தையாகும்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், மனைவியின் அறுவை சிகிச்சைக்கே சேமிப்பு அனைத்தையும் செலவழித்து விட்டதாகவும் டாக்டர்கள்தான் தனது மகனின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடையநல்லூர் குரு டெய்லர் கணேசன் அவர்கள்மரணமடைத்து விட்டார்கள்

கடையநல்லூர் குரு டெய்லர் கணேசன் அவர்கள் மரணமடைத்து விட்டார்கள்



கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி நாளிதழ் செய்தி


17/04/2012 காயிதே மில்லத் தெரு பெருச்சாளி குடும்பத்தை சேர்ந்த அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும் அல்லிமூப்பன் தெரு கண்டார் குடும்பத்தை சேர்ந்த நாகூர் மீரான் அவர்களுடைய மகளுமாகிய ரஹீமா அவர்கள் இன்று வபாத் ஆகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6.00 மணியளவில் ஜாமியுல் அன்வார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வபாத் அறிவிப்பு : காயிதே மில்லத் தெரு ரஹீமா அவர்கள் இன்று வபாத் ஆகி விட்டார்கள்

17/04/2012 காயிதே மில்லத் தெரு பெருச்சாளி குடும்பத்தை சேர்ந்த அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும் அல்லிமூப்பன் தெரு கண்டார் குடும்பத்தை சேர்ந்த நாகூர் மீரான் அவர்களுடைய மகளுமாகிய ரஹீமா அவர்கள் இன்று வபாத் ஆகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6.00 மணியளவில் ஜாமியுல் அன்வார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

வாசு தரணி சர்க்கரை ஆலை அருகே கார் மீது லாரி மோதல்: டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் பலி



நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பாலசந்திர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குசேலன் (வயது33). இவர் வாசுதேவநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார்.
குசேலன் தனது காரில் இன்று காலை மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவரது கார் தரணி சர்க்கரை ஆலை அருகே காலை 6.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவரது கார் மீது குஜராத் மாநிலத்தில் இருந்து ஆலங்குளத்திற்கு பஞ்சுலோடு ஏற்றி சென்ற லாரி மோதியது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி நொறுங்கியது. பலத்த காயமடைந்த குலேசன் இடிபாடுகளில் சிக்கி கொண்டார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியபடி கிடந்த குசேலனை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஊஞ்சல்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் பலியான குசேலனுக்கு சித்ரா என்ற மனைவியும், மகரிஷி (3) என்ற மகனும், வைஷ்ணவி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

கடையநல்லூர் அருகே லாரி மோதி தே.மு.தி.க பிரமுகர் பலி


LÛPVS¥©Ÿ A£ÚL ÚUÖyPÖŸ ÛNef·- ÛNef· மீது ÚUÖ‡ «T†‰eh·[Ö]‡¥ ÚR.˜.‡.L. ‘W˜LŸ T¦VÖ]ÖŸ.

LÛPVS¥©Ÿ A£ÚL E·[ “
ண்ÛQVÖ“W†ÛRo ÚNŸ‹RYŸ Nண்˜LÚY¥. AY£ÛPV ULÁ «.GÍ.‡£ப்T‡ (YV‰ 38). R¼ÚTÖ‰, ÚR.˜.‡.L. UÖŒX ÙNV¼hµ E¿‘]WÖL C£‹‰ Y‹RÖŸ. ˜Á]Ö· UÖYyP ÙNVXÖ[WÖL°• TR« Yf†RYŸ. ÚS¼¿ ˜Á‡]• ‡£ப்T‡, “¸Vjhz›¥ C£‹‰ “ண்ÛQVÖ“W†‡¼h ÚUÖyPÖŸ ÛNef¸¥ Y‹‰ ÙLցண்| C£‹RÖŸ. AÚRÚTÖ¥ ‡£ÚYyPS¥©ÛWo ÚNŸ‹R AšVப்TÁ (48) GÁTYŸ ÛNef¸¥ “ண்ÛQVÖ“W†‡¥ C£‹‰ ‡£ÚYyPS¥©£eh ÙNÁ¿ ÙLÖண்| C£‹RÖŸ.

“¸Vjhz ÙU›Á ÚWÖyz¥ E·[ J£ ÙTyÚWÖ¥ T¥e A£f¥ Y‹R ÚTÖ‰ ÚUÖyPÖŸ ÛNefº•, ÛNef· G‡ŸTÖWÖR «RUÖL JÁ¿PÁ JÁ¿ ÚUÖ‡e ÙLց
ண்P]. C‡¥ 2 ÚT£• Šef ®Nப்Ty| T|LÖV• AÛP‹R]Ÿ.

pfoÛN TXÂÁ½ T¦

RLY¥ A½‹R ÙNÖeL•Tyz ÚTÖ§NÖŸ N•TY CP†‰eh «ÛW‹‰ Y‹‰ «T†‡¥ pef LÖV• AÛP‹R 2 ÚTÛW• —y| pfoÛNeLÖL “¸Vjhz AWr BÍT†‡¡eh AÄ
ப்‘ ÛY†R]Ÿ. Ajh ‡£T‡eh ˜R¨R« pfoÛN A¸eLப்Ty|, ÚU¥ pfoÛNeLÖL ÙS¥ÛX›¥ E·[ J£ RÂVÖŸ BÍT†‡¡›¥ AÄU‡eLTyPÖŸ.

BÍT†‡¡›¥ pfoÛN ÙT¼¿ Y‹R ‡£
ப்T‡ pfoÛN TXÂÁ½ ÚS¼¿ T¡RÖTUÖL C\‹RÖŸ. C‰h½†‰ ÙNÖeL•Tyz ÚTÖ§Í p\“ N-CÁÍÙTePŸ ‡£UÛXoNÖ– YZehT‡° ÙNš‰ «NÖWÛQ SP†‡ Y£f\ÖŸ. «T†‡¥ C\‹R ‡£T‡eh WÖRÖ GÁ\ UÛ]« E·[ÖŸ.


ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

அஜித்தின் பில்லா 2 புது சாதனை!



அஜித்தின் பில்லா-2 படம் ரிலீஸ் ஆதவற்கு முன்பே புதிய சாதனை படைத்திருக்கிறது. பில்லா பார்ட் 1 படம் ரசிகர்களை கவர்ந்ததைப் போலவே இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, படத்தின் தொலைக்காட்சி உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒவ்வொன்றுமே பெரும் விலைக்கு பேசப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.


படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே வர்த்தக ரீதியாக பெரும் சாதனை படைத்திருக்கும் பில்லா 2, சத்தமில்லாமல் இன்னொரு சாதனையையும் படைத்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் பில்லா-2 படத்தின் இரு ட்ரையிலர்கள் யு-ட்யூபில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர்களுக்கு ஏக வரவேற்பு. வெளியான ஒரு நாளைக்குள் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்ட இந்த ட்ரைலர்களைப் பாராட்டி கமெண்ட்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடையநல்லூர் நகராட்சியில் ரூ. 21.41 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

கடையநல்லூர் நகராட்சியில் ரூ. 21.41 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய குடிநீர்த் திட்டம் செப்டம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என நகர்மன்றத் தலைவர் சைபுன்னிஷா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடையநல்லூரில் 13,332 குடிநீர் இணைப்புக்கள் உள்ளன. மேலும் சில ஆயிரம் குடிநீர் இணைப்புக்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த திமுக ஆட்சியில் ரூ.21.41 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது.
இத் திட்டத்தின் மூலம் 2040-ம் ஆண்டின் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் நாளொன்றுக்கு தேவைப்படும் சுமார் ஒரு கோடியே 41 லட்சம் லிட்டர்குடிநீரை வழங்க முடியும். இதற்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணியும்,பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.
இத் திட்டத்தின் கீழ் 7 இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டு அதில் 6 இடங்களில் தொட்டிகள் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆனால், கிருஷ்ணாபுரம் ஜவாஹர் தெருவில் மேல்நிலைத் தொட்டி அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து,குடிநீர்த் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தைநடத்தப்பட்டதையடுத்து மாற்று இடத்தில் 7-வது தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே செப்டம்பரில் இத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும். பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்
நகர்மன்றத் தலைவர்  சைபுன்னிஷா.

கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளில் 16 மையங்கள் மூலம் போலியோ சொட்டு

கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 16 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக கடையநல்லூர் நகராட்சி ஆணையர் ராமலிங்கம் வெளியிட்ட செய்தி

கடையநல்லூர் நகராட்சியில் 16 மையங்கள் மூலமும் பஸ் நிலையம், ரயில் நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. முகாமை நகர்மன்றத் தலைவர் சைபுன்னிஷா தொடங்கி வைக்கிறார்.


செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் நள்ளிரவில் வீடு புகுந்துபெண்ணிடம் நகை பறிப்பு


கடையநல்லூரில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இஸ்கானுல்லா மனைவி பர்வீன் (32). இஸ்கானுல்லா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் பர்வீன் தூங்கி கொண்டிருந்தாராம். வீட்டின் பின்புறத்தின் வழியாக வந்த மர்மஆசாமி பர்வீன் கழுத்தில் கிடந்த செயினை கத்தியை காட்டி மிரட்டி கழற்ற சொன்னாராம். இதற்கு பர்வீன் மறுக்கவே மர்ம ஆசாமி பலவந்தமாக செயினை பறித்து தப்பியோடிவிட்டான்.

தொடர்ந்து பர்வீன் போட்ட சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மர்ம ஆசாமி பறித்து சென்ற தங்க நகை சுமார் 35 கிராம் எனவும், இதன் மதிப்பு சுமார் 2 லட்ச ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

நள்ளிரவில் பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்ற இச்சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூரில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு புதிய பஸ்கள் இயக்கம்


கடையநல்லூர் - ஆத்தங்கரை பள்ளிவாசல், சங்கரன்கோவில் - சென்னை வழித்தடங்களில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இன்று (8ம் தேதி) துவக்கி வைக்கிறார்.

கடையநல்லூரில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். நேரடி பஸ் இந்த வழித்தடத்தில் இல்லாததால் தென்காசி, திருநெல்வேலி வழியாக ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு இப்பகுதி மக்கள் சென்று வந்தனர். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு நேரடி பஸ் வசதி செய்யப்படுமென அமைச்சர் செந்தூர்பாண்டியன் உறுதியளித்திருந்தார்.

இதனையடுத்து கடையநல்லூரில் இருந்து தென்காசி, கடையம், பொட்டல்புதூர், அம்பை, களக்காடு, நான்குநேரி வழியாக ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு இன்று முதல் பஸ் இயக்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு கடையநல்லூரில் இருந்து புதிய வழித்தடத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் பஸ்சை இயக்கி வைக்கிறார். மேலும் சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் புதிய பஸ் இயக்கப்படுகிறது. மதியம் 12.30 மணிக்கு இந்த பஸ்சை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இயக்கி வைக்கிறார்.

கடையநல்லூர் அருகே கிணற்றில் விழுந்த பசு


கடையநல்லூர் அருகே 60அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டனர்.

கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பாநதி அணையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் கலா என்ற பெண் பசுமாட்டை கட்டிவிட்டு வயல் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்த நிலையில் அப்பகுதியிலிருந்து சென்ற பசுமாடு அங்கிருந்த 60அடி ஆழம் உள்ள கிணற்றில் திடீரென விழுந்துவிட்டது. மாடு கிணற்றில் விழுந்ததால் அப்பகுதியில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து கடையநல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) மாரியப்பன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் சிக்கி தவித்து போராடிக் கொண்டிருந்த மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதியில் இருந்த விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.

கடையநல்லூரில் பரவும் மர்மக் காய்ச்சல்

கடையநல்லூர் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்தும்,அவர்கள் எவ்வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் 30 பேர் கொண்ட குழுவின் மூலம் ஏப்.9(திங்கள்கிழமை) முதல் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரான்மைதீன் சனிக்கிழமை தெரிவித்தார்.


கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் மட்டுமே காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கும் சாதாரண வகை காய்ச்சலே ஏற்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி பகுதியிலுள்ள மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.


இதில் டையநல்லூரைச் சேர்ந்தவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும் கடையநல்லூர் பகுதியில் முன் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வருகிறது.  மேலும் அபேட் மருந்தும் ஊற்றப்பட்டு வருகிறது. சனிக்கிழமை நகராட்சி துப்புரவு ஆய்வாளர்களுடன் கடையநல்லூர் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் அவ்வாறு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.


விழிப்புணர்வு பிரசாரம்: கடையநல்லூரில் கடந்த ஆண்டில் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதன் காரணமாக சாதாரண காய்ச்சலுக்கே மக்கள் அச்சப்படுகின்றனர். இதைப் போக்கும் வகையில் சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதுவரை எடுத்த ரத்த மாதிரிகளில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 33 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

தமிழகத்தில், 2012 ஏப்ரல் 9 வரை, 33 நபர்கள் இந்த நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. சென்னை கோவை, திருப்பூர் மற்றும் சில மாவட்டங்களில் தற்போது இந்நோய் காணப்படுகிறது.  இதில் சென்னையில் 18 பேரும், கோவையில் 11 பேரும், திருப்பூர், கடலூர், திருவள்ளுர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இத்தகவலை தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில்,
பன்றிக்காய்ச்சல்  நோய்க்கு ஆய்வக பரிசோதனை
பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் நபரின் சுவாச மண்டலத்தில் இருந்து தொண்டை தடவல்  மாதிரிகள் சேகரிக்கப்பட்டு RT - PCR எனும் பரிசோதனை மூலமாக இந்நோய் உறுதிப்படுத்தப்படுகிறது. கிண்டி அரசு கிங் நிலையம், சென்னை,  மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக இப்பரிசோதனை செய்யப்படுகிறது.


மேலும் தமிழகத்தில் 12 தனியார் ஆய்வகங்களில்  இந்த பரிசோதனை செய்ய உரிய கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த பின்னர்  அரசு  அனுமதி வழங்கியுள்ளது.


பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து
பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள்  அருகிலுள்ள மருத்துவரை அணுகி   ஆரம்ப நிலையிலேயே  கண்டறிந்து ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகளை உட் கொள்வதால் முழுமையாக இந்நோயை குணப்படுத்த முடியும். இதன் மூலம் இறப்பினை தவிர்க்கலாம். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகள் போதுமான அளவு (4 இலட்சம்) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான  சிரப் ஒசால்டாமாவீர் (டாமிபுளு) மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்களை வழங்குவதற்கான கால அவகாசம், ஏப்., 16ம் தேதியுடன் முடிகிறது



ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்களை வழங்குவதற்கான கால அவகாசம், ஏப்., 16ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் வழங்கி வருகின்றனர். விண்ணப்பங்களை வழங்க, ஏப்., 16ம் தேதி கடைசி நாள். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, "ரேசி டவர் எண்.13/7, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34 என்ற முகவரியிலோ அல்லது 044 - 2822 7617, 2825 2519, 2822 7617 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். இதுகுறித்து, ஹஜ் குழு அலுவலக ஊழியர் ஒருவர் கூறியதாவது: விண்ணப்பத்துடன், 2013ம் ஆண்டு வரை செல்லக்கூடிய பாஸ்போர்ட்டின் நகல் இணைக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், குலுக்கல் முறையில் இல்லாமல், நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இவர்களுடன் ஒருவருக்கு அனுமதி உண்டு. தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு, 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத கடைசியில், குலுக்கல் நடைபெறுகிறது. ஒருமுறை பயணம் மேற்கொண்டவர்கள், ஐந்தாண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஐந்தாண்டுகளுக்குள், ஹஜ் பயணத்திற்கு முயன்றால், அவர்கள் பயணம் ரத்து செய்யப்படும்.

திங்கள், 2 ஏப்ரல், 2012

கடையநல்லுரை மீண்டும் ஆட்டுகிறது மர்மக்காய்ச்சல்

கடையநல்லூரில் எந்த ஊரிலும் இல்லாத மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது 


கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நெல்லையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது கடையநல்லூர் வாசிகள் குறைந்தது 10 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து உயிருக்கே உலை வைக்கிற அளவிற்கு இந்த காய்ச்சல் உள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும் ரத்த வங்கிகளில் ரத்தம் வாங்குவதற்கும் கஷ்டப்படுகிறார்கள் ரத்த தேவைகள் அதிகரித்துள்ளது இந்த காய்ச்சல் எதன் மூலம் பரவுகிறது என்பதை கண்டறிந்து இதை முற்றிலும் ஒழிக்க அரசு முன்வர வேண்டும் .

கடையநல்லூர் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து



கடையநல்லூர் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். தென்காசியில் மதுரை ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மேலகரத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் இன்று காலை பள்ளி வேன் மூலம் பள்ளிக்கு சென்றனர்.
 
வேனை ஆவுடையானூரை சேர்ந்த வேல்முருகன் ஓட்டினார். குத்துக்கல்வலசை அருகே செல்லும் போது திடீரென வேன் அங்குள்ள மரத்தில் மோதியது. இதில் வேனில் வந்த மாணவர்கள் இசக்கிமுத்து (வயது 15) உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
 
தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு தென்காசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூர் நகராட்சியில் தனியார் துப்புரவு பணிக்கான கான்ட்ராக்டை நீட்டிக்க கோரிக்கை


கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தனியார் துப்புரவு பணிக்கான கான்ட்ராக்டர் பணி நிறுத்தப்பட்டு விட்ட நிலையில் சுகாதார பணிகளில் முடக்கம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலதாமதமின்றி புதிதாக பணியாளர்கள் நியமனம் செய்யும் வரை தனியாருக்கான கான்ட்ராக்ட் காலத்தை காலநீடிப்பு செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நகராட்சியை பொறுத்தவரை 249 நபர்களுக்கு மூன்று துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டுமென்ற அடிப்படை இருந்தபோதிலும் தற்போது இந்நகராட்சியை பொறுத்தவரை 100 துப்புரவு பணியாளர்களுக்கு 88 பேர் தான் பணியில் உள்ளனர். 12 துப்புரவு பணியாளர்களுக்கான பணியிடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது.

பணியாற்றும் 88 பேரில் மற்ற பிரிவுகளுக்கு சுமார் 10 பேர் வரை அனுப்பட்டு வருவதால் சுகாதார பணிகளில் 78 பேர் தான் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடையநல்லூர் நகராட்சியில் 45 ஆயிரத்து 456 ஆண்களும், 44 ஆயிரத்து 888 பெண்களும் மொத்தம் 90 ஆயிரத்து 343 பேர் குடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வார்டுகளை கொண்ட நகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதிகளில் 24 ஆயிரத்து 528 பேர் வசித்து வருகின்றனர்.

இந்நகராட்சியை பொறுத்தவரை கழிவுநீர் கால்வாய்களின் மொத்த நீளமாக 99.20 கி.மீ. கணக்கிடப்பட்டுள்ளது. கட்டண கழிப்பிடங்கள் 5, உரக்கிடங்குககள் 2, ஆடறுப்பு மனைகள் ஒன்றும் அமைந்துள்ள நிலையில் நகராட்சியில் ரோடுகளின் மொத்த நீளம் 67.139 கி.மீ.தூரமாகும். 33 வார்டுகளில் 229 தெருக்கள் அமைந்துள்ள நிலையில் சுகாதார பணிகளுக்கு 33 தள்ளுவண்டிகளும், 2 மினிலாரிகளும், டிராக்டர், டம்பர் பிளேசர் ஆகியன தலா ஒன்றும், டம்பர் பிளேசர் தொட்டிகள் 48 எண்ணம் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையில் அதிகளவு பரப்பளவு கொண்ட நகராட்சியில் சுகாதார பணிகள் தடையின்றி மேற்கொள்ளும் வகையில் குறிப்பிட்ட சில வார்டுகள் தனியாருக்கு கான்ட்ராக்டர் மூலம் விடப்பட்டன. நகராட்சியில் 21வது வார்டிலிருந்து 31வது வார்டு வரையிலும் மட்டுமின்றி கிருஷ்ணாபுரத்திலிருந்து மின்வாரிய அலுவலகம் வரை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் துப்புரவு பணிகளை தனியார் மூலம் மேற்கொள்வதற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சுமார் 7 ஆண்டுகளாக குறிப்பிட்ட வார்டு, தேசியநெடுஞ்சாலைகளில் தனியார் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையில் கடையநல்லூர் நகராட்சியில் காலியாக கிடக்கும் துப்புரவு பணியாளர் பணியிடங்களை தாமதமின்றி நிறைவேற்றிட வேண்டுமென தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனிடையில் கடந்த 31ம் தேதியோடு நகராட்சியில் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த தனியார் துப்புரவு பணி முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து 33 வார்டுகளிலும் தற்போது பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டுதான் பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. காலியாக கிடக்கும் பணியாளர் இடங்களை நிரப்பிட நகராட்சி நிர்வாகம் துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இருந்தபோதிலும் தமிழகத்தில் அதிகமான அளவில் மர்ம காய்ச்சல் பாதித்த பகுதியாக கடையநல்லூர் நகராட்சி தொடர்ந்து காணப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யும் வரை சுகாதார பணிகளை குறிப்பிட்ட வார்டுகளில் மேற்கொள்ள தனியார் மூலம் கான்ட்ராக்ட் விடுவதற்கான காலக்கெடுவினை நீடிக்க செய்ய வேண்டுமென நகராட்சி பொதுமக்கள் சார்பிலும், முக்கிய அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.