கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 28 ஜூன், 2012

நெல்லை-தென்காசி இடையே மூன்றாண்டுகளுக்கு பிறகு வரும் 5ம் தேதி ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம்


நெல்லை-தென்காசி இடையே மூன்றாண்டுகளுக்கு பிறகு வரும் 5ம் தேதி ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நெல்லை-தென்காசி இடையே 72 கிமீ தூரம் மீ்ட்டர்ஜேக் தண்டவாளத்தை கடந்த 2009ம் ஆண்டில் அகல பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. ஆமை வேகத்தில் நடந்த பணிகளால் மூன்றாடுகளாக இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். ஒரு வழியாக பணிகளை நிறைவு செய்த ரயில்வே அதிகாரிகள் கடந்த ஏப்ரலில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி மிட்டல் தலைமையில் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர். ரயிலை 70கிமீ வேகத்தில் ஓட்டிச் செல்ல மி்ட்டல் பச்சை கொடி காட்டினார்.
ஆனால் பெட்டிகள் பற்றாக்குறையால் பயணிகள் ரயில் சேவையை தொடங்க முடியவில்லை. இந்நிலையில் ரயில் சேவை தொடங்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். கோடை சிறப்பு ரயில் சேவை முடிந்தவுடன் அதிலுள்ள பெட்டிகளை கொண்டு தென்காசி ரயிலை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது ஜூலை மாதம் 5ம் தேதி நெல்லை-தென்காசி இடையே ரயில் சேவையை தொடங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக