கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 21 ஜூன், 2012

தனது காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி!

17 லட்ச ரூபாய் கையிலிருந்தால் என்ன செய்வீர்கள். ஒரு பிரிமியம் கார், டுகாட்டி பைக் அல்லது அருமையான சிங்கிள் பெட்ரூம் வீடு வாங்கிவிடலாம் அல்லவா. ஆனால், பஞ்சாபை சேர்ந்த விவசாயி கம் தொழிலதிபர் ஒருவர் புதிதாக வாங்கிய தனது காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கியுள்ளார்.பஞ்சாப் மாநிலம், மொகாலியை சேர்ந்தவர் ஜெகஜித் சிங் சகல்(40). இவருக்கு ஒன்றாம் எண் என்றால் மிகவும் ராசியாம். இதனால், இவரது வீட்டு நம்பர் முதல் மொபைல் நம்பர் வரை அனைத்தும் ஒன்றில் தான் முடியும். இதே வரிசையில், சமீபத்தில் 98 லட்ச ரூபாயில் வாங்கிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார்.
farmer splurges rs 17 lakh on car registration number

சண்டிகரில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் சிஎச்01 ஏஎன் 0001(CH 01 AN 0001) என்ற பேன்ஸி நம்பரை 17 லட்ச ரூபாயக்கு வாங்கியுள்ளார் ஜெகஜித். ஏலத்தில் இந்த பேன்ஸி நம்பருக்கு அடிப்படை விலையே ரூ.25,000ம் தான். ஆனால், ஏலத்தில் கடும் போட்டி இருந்தால் பெரும் தொகையை கொடுத்து இந்த எண்ணை ஜெகஜித் வாங்கியுள்ளார்.
பெரும் தொகை கொடுத்தது பற்றி தான் சிறிதும் கவலைப்படவில்லை என்று கூறியுள்ள ஜெகஜித் கடும் போட்டியிலும் ராசியான நம்பர் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பேன்ஸி நம்பருக்காக 20 லட்சம் வரை தருவதற்கு தயாராக இருந்ததாக தெரிவித்து மேலும் ஒரு ஷாக் கொடுத்தார் ஜெகஜித்.
ஜெகஜித் சிங் சகலிடம் மொத்தம் 8 கார்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் 0001 என்று முடியும் பதிவு எண்ணை அவர் வாங்கியுள்ளார். கடந்த 1992ம் ஆண்டு முதன்முறையாக வாங்கிய மாருதி 800 காருக்கு பிபி10 கே 0001 என்ற பதிவு எண்ணை பெற்றுள்ளார். ஆனால், அப்போது ஏல நடைமுறைகள் இல்லாததால் எளிதாக வாங்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
விவசாயமும், சண்டிகரில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையும் நடத்தி வரும் ஜெகஜித் சிங்கின் தந்தை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். ஜெகஜித் சிங் மட்டுமல்ல அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கார்கள் மற்றும் பைக்குகளும் 1 என்ற பதிவு எண்ணை கொண்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக