கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 29 ஜூன், 2012

ஹஜ் புனித யாத்திரை செல்ல தமிழகத்தில் இருந்து 2,863 பேருக்கு அனுமதி: அமைச்சர் முகமது ஜான் தகவல்

ஹஜ் புனித யாத்திரை செல்ல தமிழகத்திலிருந்து 2,863 இஸ்லாமிய பெருமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஹஜ் யாத்திரை செல்ல உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு முதன் முதலாக புத்தறிவு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இந்தாண்டு தமிழகத்திலிருந்து 12,110 பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் 2,683 பேருக்கு ஹஜ் யாத்திரை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் வேலூர் மாவட்டத்திலிருந்து 374 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து 43 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல அதிக அளவில் விண்ணப்பித்து இருந்தும், குறைந்த அளவில் தான் அனுமதி கிடைத்துள்ளது. விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் யாத்திரை செல்ல முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக